பாஜகவில் அடைக்கலமாகும் விஜய்… தீடிரென விஜய் முடிவுக்கு என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் தனக்கு எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் அதிமுக அல்லது திமுக என்று ஏதாவது ஒரு கட்சியிடம் அடைக்கலம் அடைந்து தன்னுடைய பிரச்சனையை தீர்த்துக் கொள்வார். அந்த வகையில் 2006 முதல் 2011 வரை நடந்த திமுக ஆட்சியில் விஜய் நடிப்பில் வெளியான சுறா படம் படுதோல்வி அடைந்தது. அப்போது அந்த படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் மற்றும் விஜய்க்கும் இடையில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் அடுத்து விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்திற்கு மிகப்பெரும் நெருக்கடியை கொடுத்தது அப்போதைய ஆளும் திமுக.இதனால் காவலன் திரைக்கு வருவதற்கு தாமதமானது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அதுவரை திமுக ஆதரவாளராக இருந்தவர். தனக்கு திமுகவால் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்வதற்கு அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகருடன் அப்போது எதிர்கட்சியாக இருந்த ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னுடைய பிரச்சனைக்கு உதவி கூறினார்.

பின்பு ஜெயலலிதா தயவில் காவலன் படம் திரைக்கு வந்தது. இதனை தொடர்ந்து 2011 தேர்தலில் அதிமுகவுக்கு வாய்ஸ் கொடுத்தார் விஜய். அதிமுக ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 2013ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்தில் சர்ச்சை கூறிய ஒரு வசனம் போஸ்டரில் இடம் பெற்றிருந்தது. இது ஜெயலலிதாவை சீண்டுவது போன்று இருந்ததால், தலைவா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஏற்கனவே திமுகவிடம் பிரச்னையில் சிக்கி ஜெயலலிதாவிடம் அடைக்கலம் அடைந்ததால், இம்முறை மீண்டும் திமுக பக்கம் உதவி கேட்டு செல்ல முடியாது என்பதால் நேரடியாக கைகட்டி அம்மா உதவி செய்யுங்கள் என்று ஜெயலலிதாவிடம் வீடியோ வெளியிட்டு சரண்டர் ஆனார் நடிகர் விஜய். இதன் பின்பு தான் தலைவா படம் திரைக்கு வந்தது. இந்நிலையில் ஜெயலலிதா மறைவு அதன் பின்பு கருணாநிதி மறைவு இருவரும் மறைந்த பின்பு தன்னுடைய அரசியல் கருத்துகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வந்தார் நடிகர் விஜய்.

இதில் விஜய் விமர்சனத்திற்கு அதிகம் பாதிக்கப்பட்டது பாஜக கட்சி தான். ஆனால் மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய்க்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனைக்கு பின்பு பாஜகவை விமர்சனம் செய்வதை தவிர்த்து வருகிறார் விஜய். தற்பொழுது காவலன் படத்தில் விஜய்க்கு என்ன பிரச்சனை ஏற்பட்டதோ அதே பிரச்சனையை வாரிசு படத்திலும் சந்தித்து வருகிறார் விஜய். இதன் பின்னணியில் இருப்பது உதயநிதி ஸ்டாலின் தான் என்கின்ற ஒரு குற்றச்சாட்டும் உலாவி வந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் நடிகர் விஜய் தற்பொழுது தன்னை காப்பாற்றிக் கொள்ள பாஜகவில் அடைக்கலமாகுவதற்கு தயாராகி விட்டார் என்று கூறப்படுகிறது. உதயநிதி தரப்பிலிருந்து வரும் நெருக்கடியை சமாளிக்க பாஜகவிடம் உதவி கேட்டு டெல்லியில் உள்ள சில முக்கிய புள்ளிகளிடம் விஜய் பேசி வருவதாக கூறப்படுகிறது.

காவலன் படத்தின் போது தனக்கு உதவி செய்த ஜெயலலிதாவுக்கு 2011 ஆம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் வாய்ஸ் கொடுத்தார் விஜய். அதேபோன்று தற்பொழுது விஜய்க்கு ஏற்பட்டுள்ள சிக்கலில் இருந்து விடுபட பாஜக உதவி செய்யும் பட்சத்தில் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக விஜய் வாய்ஸ் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.