நடிகர் விஜய் கொடியில் உள்ள குறியீடுகள்… அட இந்த கொடியில் இவ்வளவு அர்த்தம் உள்ளதா.?

0
Follow on Google News

நடிகர் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய இவர் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இருந்து தான் தனது தேர்தல் பயணத்தை தொடங்குவேன் என்றும் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தான் கட்சியின் பெயரை மட்டுமே கூறியிருந்த நிலையில், விஜய் கட்சியின் கொடி என்னவென்று அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்திருந்தார். ஆனால் தமிழகமே அதிரும் அளவிற்கு, யானையின் பலத்தோடு, நடிகர் விஜய் மாஸாக தனது கட்சி கொடியையும், கட்சி பாடலையும் அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அறிமுகப்படுத்திய கொடியும், அடர் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் தான் இருந்தது. ஆனால் விஜயின் முகம் இதில் இடம் பெறவில்லை. அதற்கு மாற்றாக தமிழக வெற்றி கழகத்தின் கொடியானது அடர் சிவப்பு நிறத்திலும் நடுவில் மஞ்சள் நிறத்திலும் அமைந்துள்ளது.இந்த மஞ்சள் நிற பகுதியில் தான் இரண்டு பக்கமும் யானைகள் பிழிர்வது போலவும், நடுவே வாகை மலரும், அந்த வாகை மலரை சுற்றி பச்சை மற்றும் நீல நிற நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் தான் விஜய் ஒன்றும் இதுதான் கொடி என ஏதோ ஒன்றை அறிமுகம் செய்யவில்லை. இதில் பல்வேறு சிறப்புகள் இருக்கிறது என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் கொடியை அறிமுகப்படுத்தும்போது ஒரு மாஸான வீடியோ பாடலையும் வெளியிட்டு இருந்தார். அதில் முதலில் இரண்டு யானைகள் மக்களை துன்புறுத்திக் கொண்டிருக்கும் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இருக்கும் இரண்டு யானைகள், மக்களை துன்புறுத்திய யானையை வீழ்த்தி மக்களை காக்கிறது. அதற்கு நடுவில் விஜய் நிற்கிறார்.

இந்நிலையில் தான் மக்களை துன்புறுத்திய யானைகளில் ஒன்று திமுக, மற்றொன்று அதிமுக, அந்த யானைகளை தான் வீழ்த்த தற்போது விஜய் பலம் வாய்ந்த இரண்டு யானைகளோடு வந்து மக்களை காக்கிறார், அதனால் தான் யானை சின்னத்தை கொடியில் வைத்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. அடுத்ததாக நடுவில் இருக்கும் வாகை மலரை தான், சங்க காலத்தில் வெற்றி சின்னமாக தொடுத்து கழுத்தில் அணிந்து கொள்வார்கள்.

அதாவது போரில் வெற்றி பெறும் வீரர்களுக்கு சூட்டப்படும் மலர்தான் வாகைமலர். இந்நிலையில்தான் வெற்றிவாகை சூட தனது கொடியில் வாகை மலரையும் வைத்திருக்கிறார். அடுத்ததாக அந்த வாகை மலரை சுற்றி இருக்கும் பச்சை மற்றும் நீல நிற நட்சத்திரம், அதாவது நீலம் என்றால் தலித்தியம் பேசும் அரசியல், பச்சை என்றால் சிறுபான்மையினருக்கான அரசியல், மேலும் அந்தப் பாடலில் ஆதிகுடி தமிழர்கள் என, குடிதேசிய அரசியல் சார்ந்த வரிகளும் இடம்பெற்றிருக்கும்.

இந்நிலையில் தான் விஜய், அனைவருக்குமான அரசியலை தான் தமிழக வெற்றிக் கழகம் செய்யும் என்பதை உறுதிப்படுத்தி இந்த கொடியை வெளியிட்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் வெளியிட்ட கட்சி கொடியையும், அதன் பாடலையும் கேட்டு தமிழக அரசியல் கட்சிகள் அரண்டு போய் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.