அம்மாவாசை அன்று விஜய் நடத்திய மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே, விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்கிற தகவலை நேரடியாக தெரிவிக்கவில்லை என்றாலும், தனது பேச்சின் மூலம் மறைமுகமாக தெரிவித்து விட்டார். இந்த நிலையில் தற்பொழுது விஜய் என்ன செய்தாலும், ஜோதிட முறைப்படி தான் தற்பொழுது செய்து வருவதாகவும், அதனால் தான் ஜோதிடர் ஆலோசனை படி அம்மாவாசை அன்று மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி, தன்னுடைய அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளார் விஜய்.
இந்த நிலையில் விஜய் தீடிரென ஜோதிடத்தின் மீது மூழ்கியுள்ள பின்னணி குறித்த தகவல் வெளியகியுள்ளது. விஜய் அரசியலில் என்ட்ரி கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார், அந்த வகையில், தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களை நேரில் அழைத்து தன்னுடைய அரசியல் வருகை குறித்து ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறார் விஜய், அந்த வகையில் இலக்கியவாதி பழ.கருப்பையாவை சந்தித்து பேசி ஆலோசனை பெற்ற விஜய் அவரை தொடர்ந்து அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்களை சந்தித்து வந்துள்ளார்.
இந்த வரிசையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவியாளராக இருந்த பூங்குன்றனாரை நேரில் விஜய் சந்தித்து, தன்னுடைய அரசியல் வருகை குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா உடன் பயணித்த தன்னுடைய அரசியல் அனுபவங்களை விஜய்யிடம் பகிர்ந்து கொண்ட பூங்குன்றனார், ஜோதிடத்தின் மீது ஜெயலலிதாவுக்கு இருந்த பற்று குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் ஜோதிடர் ஆலோசனை படி ஜெயலலிதா அடைந்த வெற்றியை பற்றி விஜய்யிடம் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா உதவியாளர். இதனை தொடர்ந்து ஜெயலலிதா சந்திக்கும் ஜோதிடர்கள் யார் யார் என கேட்டறிந்த விஜய். திண்டிவனம் அருகே இருக்கும் ஜோதிடர் ஒருவர் தான் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது ஜோசிய ஆலோசனை வழங்கி வந்துள்ளார், இதனை தொடர்ந்து விஜய் மக்கள் மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்த் மூலம் திண்டிவனம் அருகே உள்ள ஜோதிடரின் ஆலோசனை படி, அம்மாவாசை அன்று சமீபத்தில் நடந்த மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் விஜய் என கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய் மாணவர் சந்திப்பு நிகழ்வு குறித்து தெரிவித்துள்ள ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனார் . அமாவாசையில் அரசியல் களத்திற்கு அஸ்திவாரமா? வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன். என தெரிவித்தவர் மேலும், மாணவர்களை ரசிக்க வைத்திருக்கிறார் விஜய். நாளைய தலைவர்களை தன் பக்கம் இழுப்பதுதான் இன்றைய தேவை. அவர்கள் தான் புதிதாக தங்களை இயக்கங்களில் இணைத்துக் கொள்ளப் போகிறவர்கள்.
புதியவர்களை தன் பக்கம் கவர்ந்து கொண்டால் பழையவர்கள் படிப்படியாக தன் பக்கம் திரும்புவார்கள் என்ற ஐடியா எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. மாணவர்களை ஊக்கப்படுத்தியிருக்கும் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். விஜய் மக்கள் இயக்கம் தொடர்ந்து மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது தெரிந்ததே! இனி மக்கள் இயக்கத்தினரின் வேகம் அதிவேகமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
நடிகர் விஜய் அவர்கள் கண்டிப்பாக அரசியலில் பிரவேசம் செய்யப் போகிறார் என்பதை இன்றைய நிகழ்வு உணர்த்துகிறது. ஏதோ ஒரு காலத்திற்காக காத்திருக்கிறார் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. புதிய படம் வருகின்ற நேரத்தில் இந்த மாதிரி நிகழ்வுகள் நடந்தால், அதை நாம் படத்தினுடைய விளம்பரத்திற்காக என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இன்றைய நிகழ்வு அப்படிப்பட்டதல்ல என்பதாகவே நான் அறிகிறேன்.
அடுத்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டிப் போட போகிறது என்பதை இன்றைய நிகழ்ச்சி வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. ஒட்டுக்குப் பணம் கொடுத்தாலும் வாங்காதீர்கள் என்று அறைகூவல் விடுப்பது, நேர்மையானவரை தேர்ந்தெடுங்கள் என்று சொல்வது ஏதோ ஒன்று நடக்க இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. வாருங்கள். மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.
பலர் அரசியலில் ஈடுபடும்போது மக்களுக்கு தானாகவே நல்லது நடக்கத் தொடங்கும். மீண்டும் வரவேற்கிறேன் என விஜய்யின் அரசியலை வரவேற்றுள்ள ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனார், இனி வரும் காலத்தில் விஜய்யின் அரசியலுக்கு அவருடன் அணில் போன்று செயல்பட இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தன்னுடைய அரசியல் உதவியாளராக இருக்க பல ஜாம்பவான்களிடம் உதவியாளராக இருந்தவர்களை தேடி பிடித்து தன் பக்கத்தில் வைத்துக்கொள்ளவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.