தமிழக வெற்றி கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேச மாட்டார் என ஒரு வாரத்திற்கு முன்பே அறிவித்திருந்த நிலையில், திடீர் டிவிஸ்ட்டாக மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் அவர், மத்திய அரசுக்கு எதிராகவும், மாநில அரசுக்கு ஆதரவாகவும், குறிப்பாக நீட் தேர்வு ரத்து பற்றியும் பேசி அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
பலரும் விஜயின் இந்த பேச்சை கேட்டு, போன வாரம் பேசிய பேச்சில் திமுக அரசை எதிர்த்து, போதை பொருளை எதிர்த்து பேசி இருந்தார், ஆனால் இந்த வாரம் அப்படியே ரிவீட் அடித்து திமுகவுக்கு ஆதரவாகவும், திமுகவின் நீட் விலக்கு நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும் பேசுகிறாரே என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்த நிலையில், இப்படி விஜய் அந்தர் பல்டி அடிதத்தின் பின்னணியில் என்ன நடந்தது என பல்வேறு தகவல் வெளியாகியுள்ளது.
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில், மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவை இரண்டு கட்டமாக நடத்திய விஜய், முதற்கட்டமாக ஜூன் 28ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில், ஆளும் திமுக அரசை கடுமையாக எதிர்த்து பேசியிருந்தார். அதில் அவர், ஆளும் அரசு போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
குறிப்பாக நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த பின் பேசும் முதல் பேச்சு என்பதால், இதற்கான எதிர்பார்ப்பு தமிழக மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும் அதிகளவில் இருந்தது. அப்படி அவரின் முதல் பேச்சே ஆளும் அரசுக்கு எதிராக அமைந்திருந்ததால் ஆளும் தரப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நடிகர் விஜய் நீலாங்கரை கடற்கரை அருகே 120 கோடி மதிப்பில் பங்களா வீடு ஒன்றை கட்டி இருக்கிறார்.
அந்த வீடு கடற்கரை அருகே, Coastal Regulation Zone-ன் முதலாவது இடத்தில் இருப்பதால், மாநில அரசு தேவைக்கேற்ப கடற்கரை அருகே இருக்கும் கட்டிடங்கள் மேல் எந்த ரூல்ஸ் வேண்டுமானாலும் போட்டு கொள்ளவும், அந்த கட்டிடங்களை அப்புறப்படுத்தவும் அதிகாரம் இருப்பதால், ஆளும் அரசு அதனை பயன்படுத்திக்கொண்டு, விஜயை தன் கைக்குள் போட்டுக் கொள்ள பக்காவாக பிளான் போட்டுவிட்டது என கூறப்படுகிறது.
இதனால் விஜய் கட்டிய வீட்டின் பிளான், அப்ரூவல், இது எதற்காக கட்டப்பட்டது, வீட்டில் எத்தனை கிச்சன்கள் இருக்கிறது, எத்தனை Swimming pool-கள் இருக்கிறது. swimming pool கட்ட சரியான M.O.C வாங்கி இருக்கிறாரா என பல டாக்குமெண்ட்களை ஆராய்ச்சி செய்து, இதில் ஒன்று சரியாக இல்லை என்றாலும் விஜய் கட்டி வரும் வீட்டிற்கு ஆளும் தரப்பில் இருந்து சிக்கலை ஏற்படுத்து முடியும்.
ஏற்கனவே மறைந்த கேப்டன் விஜயகாந்த் அரசியல் என்ட்ரி கொடுத்த போது, அவருடைய கோயம்பேடு மண்டபத்தை இடித்திருப்பதை அறிந்த விஜய், ஆளும் அரசிடம் சரண்டர் ஆகி இருக்கிறார். அதனால் தான் முதற்கட்ட விருது வழங்கும் விழாவில் மட்டுமே பேசுவதாக அறிவித்திருந்த விஜய், இரண்டாம் கட்ட நிகழ்ச்சியிலும் பேசியிருக்கிறார் என்றும், அவரை அவ்வாறு பேச ஆளும் தரப்பு தான் கட்டாயப்படுத்தி உள்ளதாகவும், நாங்கள் சொல்வதை தான் பேச வேண்டும் என்றும் கூறி மிரட்டியிருக்கிறார் கள் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
அதன்படி தான் நடிகர் விஜய், நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து பேசியதோடு, நீட் தேர்வு விலக்குகோரி சட்டசபையில் தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கும் ஆதரவு அளிப்பதாகவும் பேசியுள்ளார். மேலும் மத்திய அரசை, ஒன்றிய அரசு என்றும் குறிப்பிட்டு பேசியிருந்தார். அதோடு கல்வியை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து மாநில அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும், முழுவதுமாக திமுகவின் உடன் பிறப்பு போன்றே விஜய் பேசியதற்கு பின்னனியில் விஜய் மிரட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.