நடிகர் விஜயை விட்டு அவருடைய மனைவி சங்கீதா பிரிந்து வாழ்ந்து வருவதாக கடந்த சில வருடங்களாக கூறப்பட்டு வருகிறது, மேலும் நடிகர் விஜயின் மகன் மகள் என இருவருமே அம்மா சங்கீதா கண்ட்ரோலில் இருப்பதாக கூறப்படுகிறது, விஜய் சங்கீதா இருவருடைய பிரிவுக்கு முக்கிய காரணம் திரிஷா தான் என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
அதாவது சுமார் 15 வருடங்களுக்கு முன்பு குருவி படம் வெளியான காலத்தில், திரிஷா- விஜய் குறித்த கிசுகிசு சினிமா வட்டாரங்களில் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. அப்போது திரிஷா விவகாரம் விஜய் – சங்கீதா இருவருக்கும் இடையிலான குடும்ப பிரச்சனையாக உருவானது. இந்நிலையில் அப்போதே விஜய்யை விட்டு சங்கீதா பிரிய முடிவு செய்த போது, விஜய் இறங்கி வந்து சமாதன முயற்சியில் ஈடுபட்டதாகவும்.
அதற்கு சங்கீதா, இனிமேல் திரிஷாவுடன் இணைந்து நடிக்க கூடாது என்று போட்ட கண்டிஷனை விஜய் ஏற்று அதன் பின்பு விஜய் – சங்கீதா இருவருக்கும் இடையிலான பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்த விவகாரத்திற்கு பின்பு திரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை விஜய் நிறுத்தி விட்டார். இந்நிலையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சென்ற விஜய் – சங்கீதா வாழ்க்கையில் பல வருடம் கழித்து மீண்டும் பிரச்ச்னைக்கு காரணமாக என்ட்ரி கொடுத்துள்ளார் திரிஷா.
விஜய் நடித்த லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக விஜய்யின் சிபாரிசில் நடித்தார் திரிஷா. லியோ படத்தில் திரிஷா கமிட்டான போதே விஜய் – சங்கீதா இடையில் பிரட்சனை உருவாக தொடங்கியதாக கூறப்படும் நிலையில், ஆனால் இம்முறை சங்கீதா என்ன சொன்னாலும் கண்டுகொள்ளவில்லை விஜய். ஒரு கட்டத்தில் விஜய்யை விட்டு பிரியும் முடிவை சங்கீதா எடுத்த போது இது தான் நல்லது, இனி நம்மை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என அந்த முடிவை வரவேற்று இருக்கிறார் விஜய் என கூறப்படுகிறது.
அந்த வகையில் லியோ படத்தில் விஜய் – திரிஷா இருவரும் இணைந்தது தான் மீண்டும் சங்கீதா விஜய் பிரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் சங்கீதா தனது இரண்டு குழந்தைகள் உடன் லண்டனில் இருந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அவ்வப்போது சென்னைக்கும் சங்கீதா வந்து செல்வதாகவும், ஆனால் விஜய்யுடன் இல்லாமல் அவர் தனியாக தான் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் லியோ படபிடிப்பு முடிந்த பின்பும் விஜயும் திரிஷாவும் நைஜீரியா நாட்டில் சுற்றுலா சென்ற புகைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து தற்பொழுது கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜயும் திரிஷாவும் தனி விமானத்தில் ஜோடியாக சென்ற வீடியோவும் வெளியானது. இதனை தொடர்ந்து விஜய் தன்னுடைய மனைவி குழந்தைகளை கண்டு கொள்வதே இல்லை என்றும் திரிஷா தான் உலகம் என்று சுற்றி வருவதாக விமர்சனங்கள் எழுந்து உள்ளது.
மேலும் விஜயின் மகன் தன்னுடைய தந்தையை நேரில் பார்க்க கூட விருப்பம் இல்லை என்றும், அதனால் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக சஞ்சய் தன்னுடைய தந்தையின் தயவே இல்லாமல் தன்னுடைய தாய் சிபாரிசில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுகமாக இருக்கிறார். மகன் இயக்கும் முதல் படத்தின் எந்த ஒரு நிகழ்விலும் விஜய் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம், விஜய் மீது மகன் சஞ்சய்க்கு இருக்கும் வெறுப்பு தான் என கூறப்படுகிறது.
என் அம்மாவுக்கு அப்பா துரோகம் செய்து விட்டார் என அப்பா விஜய் மீது கடும் கோபத்தில் இருக்கும் சஞ்சய், தந்தை விஜய்யை பார்க்க கூட விருப்பம் இல்லாமல் இருந்து வரும் நிலையில், மறுபக்கம் இதை பற்றி கொஞ்சம் கூட கவலையில்லாமல் திரிஷாவே உலகம் என விஜய் சுற்றி வருவதாக கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்