விஜய் கையை தட்டிவிட்டு மாணவி… அதுமட்டுமில்லை மேடையில் நடந்த மற்றோரு சம்பவம்…

0
Follow on Google News

நடிகர் விஜய்யின் சமீபத்தில் நடந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் விஜய் பொதுவாக அனைத்து மாணவர், மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் தோலில் கை போட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில், ஒரே ஒரு மாணவி மட்டும் விஜய் தன் மீது தோளில் போட்ட கையை எடுத்துவிட்ட நிகழ்வு மிகப்பெரிய விவாத பொருளாக மாறி உள்ளது.

பொதுவாகவே அந்த நிகழ்ச்சியை ஆரம்பம் முதல் இறுதி வரை பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும், விஜய் பெற்றோர் தோளில் ஒரு கையும் மாணவ, மாணவியர்கள் மறுக்கையும் போட்டு தான் ஒவ்வொரு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்த வகையில் குறிப்பிட்டு அந்த மாணவி தோளில் மட்டும் விஜய் கை போடவில்லை, அந்த வகையில் இதை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதே மிகப்பெரிய தவறு என்றுதான் பலரும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

மேலும் அந்த நிகழ்வில் விஜய் பேசும்போது கூட, ஒரு பெற்றோராக ஒரு அரசியல் கட்சி தலைவராக என்று தான் மாணவர்களுக்கு பல தகவல்களை அறிவுரையாக சொல்லுகிறார். அந்த வகையில் தன்னை அங்கிருந்த மாணவர்களிடம் ஒரு பெற்றோர்களாகவே விஜய் நடந்து கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு பெற்றோர் ஒரு குழந்தை தோளில் கை போடுவதாக தான் பார்க்க வேண்டும்.

விஜயின் அரசியல் வருகையை பொறுத்துக் கொள்ளக்கூடிய முடியாதவர்கள் விஜயை வீழ்த்த வேண்டும் என்கின்ற ஒரு குறிக்கோளுடன் இருக்கக்கூடியவர்கள், அந்த குறிப்பிட்ட மாணவி தன் தோளில் விஜய் கை போடுவதை எடுத்து விடும் அந்த குறிப்பிட்ட ஒரு வீடியோவை மட்டும் எடுத்து சமூக வலைதளங்களில் உலாவிட்டு விஜய்க்கு அவபெயரை ஏற்படுத்த வேண்டும் என்கின்ற உள்நோக்கம் தான் இந்த செயல் என்று ஒரு தரப்பினர் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அதாவது விஜய் நடத்திய மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா தொடங்குவதற்கு முன்பு விஜய் அரசியலுக்கு எதிரான அரசியல் கட்சிகள் மற்றும் விஜயை பிடிக்காதவர்கள் இந்த விழாவில் ஏதாவது ஒரு சிறிதான விஜய்க்கு எதிரான ஒரு நிகழ்வு நடந்துவிடக் கூடாதா.? அதை வைத்து நாம் பூதாகரமாக வைத்து விஜயை டேமேஜ் செய்ய முடியாதா என்று காத்திருந்தவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் மாணவி விஜயின் கையை தன் தோளிலிருந்து எடுத்து விட்ட இந்த நிகழ்வாகும்.

அதேபோன்று விஜய்க்கு எதிரானவர்கள் எதிர்பார்த்தது போன்று இந்த அந்த நிகழ்வை பூதாரமாக்கி விஜய் மீது அவதூறு கிளப்ப வேண்டும் என்பதற்காகவே இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. ஆனால் விஜய் விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் அந்த நிகழ்வில் உன்னிப்பாக கவனித்து இருந்தால் நீட் தேர்வு குறித்து விஜய் வாயை திறந்து இருக்க மாட்டார்.

அதாவது இன்றுஅரசியலிலும் சரி பொது தளத்திலும் சரி மிகப்பெரிய ஒரு விவாத பொருளாக இருக்கும் நீட் தேர்வு குறித்து விஜய் தன்னுடைய விளக்கத்தை மாணவர்கள் மத்தியில் கொடுத்திருக்க வேண்டும். அதாவது நீட் மாணவர்களுக்கு நன்மை தரும் என விஜய் நினைத்திருந்தால் அதன் நன்மையை மாணவர்கள் மத்தியில் விளக்கம் கொடுத்திருக்க வேண்டும், அல்லது நீட் மாணவர்களுக்கு எதிரானது என்றால் அது குறித்து விஜய் பேசி இருக்க வேண்டும்.

ஆனால் எங்கே நீட்டுக்கு ஆதரவாக பேசினால் நீட்டை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் கோபத்திற்கு நாம் உள்ளாகிவிடுவோம் என விஜய் பயந்தாரா.? அல்லது நீட்ட எதிர்த்து நாம் பேசினால் நீட்டுக்கு ஆதரவாக இருக்கும் அரசியல் கட்சிகள் நமக்கு குடைச்சல் கொடுப்பார்கள் என்கின்ற ஒரு அச்சத்தில்தான் இந்த நீட் குறித்து விஜய் வாயை திறக்கவில்லை என்பது பற்றி விஜயின் மாணவர், மாணவிகள் சந்திப்பு நிகழ்வு குறித்து விமர்சனம் செய்வது தான் நாகரிகம். ஆனால் மாணவி தோளில் விஜய் கையை போட்டதை மாணவி அதை எடுத்து விட்டதை விமர்சனம் செய்வது என்பது விஜய் மீது உள்ள வன்மம் என பலரும் கருத்து தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here