எங்க தேவரை புறக்கணிப்பதா.. விஜய்.. இரு நாங்க யாருனு காட்டுகிறோம்.. கொந்தளித்த முக்கிய பிரபலம்..

0
Follow on Google News

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் சில நாட்களுக்கு முன்பு நடந்த மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய். மாணவர்கள் மத்தியில் பேசுகையில் நிறைய படிங்க. அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிங்க என பேசி இருந்தார், இந்நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் சௌத்ரி தேவர் இந்த விவகாரம் குறித்து பேட்டி ஒன்றில் மிக கடுமையாக எச்சரித்துள்ளார்.

சௌத்ரி தேவர் பேசுகையில், ஒரு தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை புறக்கணித்துவிட்டு விஜய் பேசியுள்ளார், அப்படியானால் ஒரு சொல்லக்கூடிய தலைவர் இடத்தில் தேவர் இல்லை என்று விஜய் சொல்கிறாரா.? என கேள்வி எழுப்பிய சௌத்ரி தேவர், அடுத்த முறை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை உச்சரிக்கவில்லை என்றால் விஜய் ரசிகராக இருக்கக்கூடிய முக்குலத்தோர் சமூகத்தினர் அவருடைய ரசிகர் மன்றங்களை நிச்சயமாக களைப்பார்கள். அது நடக்குமா.? இல்லையா.? என்று மட்டும் பாருங்கள் என சவால் விடுத்த சௌத்ரி தேவர்.

தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தவிர்த்து விட்டு ஒருவர் அரசியல் செய்தால் எங்கள் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்று தென் மாவட்டங்களில் விஜய் படம் ஓடுகிறது என்றால் அதற்கு காரணம் எங்களுடைய சமூகத்தினர் தான், உறுதியாக இந்த விவகாரத்தில் விஜய்க்கு எதிராக அவர்கள் மாறுவார்கள், மன்றங்கள் அனைத்தும் கலைக்கப்படும். அனைத்து தலைவர்களையும் பொதுவாக சொல்லியிருந்தால் நாங்கள் கேள்வி எழுப்ப மாட்டோம்.

குறிப்பிட்டு தேவரை விஜய் தவிர்த்தார் என்றால் நாங்கள் யார் என்பதை காட்ட நேரிடும், விஜய் இளைஞர்களை பாராட்டும் விதமாக ஒரு விழா நடத்துகிறார் அந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் ஒரு தலைவரை படிக்க வேண்டும் என்றால் முதன்மையாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தான் படிக்க வேண்டும் என்று விஜய் சொல்லி இருக்க வேண்டும். தேவரை படிக்க சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை, மற்ற மூன்று தலைவரை குறிப்பிட்டு விட்டு தேவரை விஜய் தவிர்க்கும் பட்சத்தில் நாங்கள் கண்டிப்பாக தட்டிக் கேட்போம்.

அந்த வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை உச்சரிக்காமல் விஜய் அரசியலுக்குள் வந்தால் அது மிகப் பெரிய வீழ்ச்சியை சந்திக்கும், தேவர் பெயரை யார் உச்சரிக்கவில்லை என்றாலும் நான் தட்டி கேட்பேன், அரசியல்வாதிகள் மறைத்தது போன்று இன்று நடிகர்களும் தேவரின் புகழை மறைக்க தொடங்கி விட்டார்கள்.

எம்ஜிஆர் தேவரைப் பற்றி பெருமையாக பேசியிருக்கிறார் அப்படி இருக்கும்போது எம்ஜிஆரே பேசும்போது விஜய் எல்லாம் எம்மாத்திரம், அல்ரா சில்ர விஜய் எல்லாம் ஒரு ஆளே கிடையாது. இரண்டரை கோடி முக்குலத்தோர் சமூகம் இருக்கின்றது அதில் ஒன்றரை கோடி இளைஞர்கள் இருக்கிறார்கள் அந்த இளைஞர்கள் எல்லாம் யாரோ ஒரு நடிகருக்காக பின்னால் இருக்கிறார்கள், விஜய் தலைவர்கள் பெயரை குறிப்பிடும் போது தலைவர்களோடு தலைவராக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை குறிப்பிட்டால் எங்கள் சமூகத்தின் ஆதரவு இருக்கும்.

இல்லையென்றால் அவருக்கு எங்களுடைய சமூகத்தின் ஆதரவு இருக்காது, லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை குறிப்பிடவில்லை என்றால் லியோ படத்தை எங்க மக்கள் புறக்கணிப்பார்கள், எங்களுடைய மக்களும் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் தான். அப்படி இருக்கும்போது எப்படி விஜயை தலைவராக ஏற்றுக் கொள்வார்கள் என சௌத்ரி தேவர் மிக கடுமையாக விஜயை எச்சரித்தார்.