விஜயகாந்த் செய்த நன்றியை விஜய் நினைச்சு பார்க்கணும்… பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை..

0
Follow on Google News

நடிகர் விஜய் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் விஜயகாந்த், அது மட்டுமின்றி விஜய்யின் தந்தைக்கும் பல இக்கட்டான சூழலில் முன் வந்து உதவி செய்தவர் விஜயகாந்த். விஜயை ஒரு நடிகனா உருவாக்க, தொடர்ந்து அவருடைய தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மகன் விஜய்யை வைத்து எடுத்த அனைத்து படங்களும் தொடர் தோல்வியை கொடுத்தது, இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார் எஸ் ஏ சந்திரசேகர்.

இரு கட்டத்தில் விஜய் தந்தைக்கு சுமார் 40 லட்ச ரூபாய் கடன் காரணமாக, அவருடைய வீட்டை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படி ஒரு சூழலில் சூழலில் தான் நடிகர் விஜயகாந்தை அணுகி தன்னுடைய மகன் உடன் இணைந்து விஜயகாந்த் நடிக்க வேண்டும், அப்போதுதான் விஜய் முதலில் ஒரு நடிகராக மக்கள் மத்தியில் அறியப்படுவார் என எஸ் ஏ சந்திரசேகர் கேட்டுள்ளார்.

அப்போது கேப்டன் பிரபாகரன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து உச்சத்தில் இருந்த நடிகர் விஜயகாந்த் சற்றும் யோசிக்காமல் உடனே செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து கொடுத்தார் விஜயகாந்த். இந்த படத்தில் விஜயகாந்த் நடிக்க சம்பளமே வாங்கவில்லை என்றும் கூறப்படுகிது.இந்த படத்திற்கு பின்பு விஜய் என்கின்ற ஒரு நடிகர் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். மேலும் அடுத்தடுத்து பூவே உனக்காக காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று ஒரு முன்னணி நடிகராக வந்தார் விஜய்.

இப்படி விஜய் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த விஜயகாந்த், விஜய் குடும்பம் கடனில் இருந்து மீண்டு வருவதற்கும் துணையாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வரும் நிலையில் ரஜினிகாந்த், போன்ற முன்னனி நடிகர்கள் மற்றும் தமிழக முதல்வர் முதற்கொண்டு விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள்.

ஆனால் விஜயகாந்தால் சினிமாவில் வாழ்வு பெற்ற நடிகர் விஜய், இதுவரை விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவில்லை, இது விஜய்க்கு கொஞ்சம் கூட நன்றி இல்லையா என விஜய் மீது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் விஜய் விஜயின் அரசியல் என்ட்ரி குறித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

அவர் பேசுகையில், அரசியல் வேறு, சினிமா வேறு. “40 ஆண்டு காலம் தன் வாழ்க்கையை பலருக்கும் முன்னுதாராணமாக வாழ்ந்தவர் விஜயகாந்த். இனி யார் நினைத்தாலும் அவரைப்போல யாராலும் வர முடியாது. எதையும் எதிர்பார்க்காமல் அனைவருக்கும் உதவியவர் விஜயகாந்த். அவரைப்போல மற்றவர்களும் வர நினைத்தால் அதன் விளைவு மோசமாகத்தான் இருக்கும் என மிக கடுமையாக விஜய்யை எச்சரிக்கும் விதத்தில் பேசியிருந்தார் பிரேமலதா விஜயகாந்த்.

விஜயகாந்த் மனைவி பிரேமலதா, இதற்கு முன்பு ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் அரசியல் என்ட்ரி கொடுத்த போது விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற வீட்டிற்கு சென்ற போது, அவர்களை வரவேற்று விஜயகாந்த் உடன் இணைந்து பிரேமலதாவும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார், ஆனால் விஜய் அரசியல் என்ட்ரி குறித்து கேள்விக்கு மிக ஆக்ரோஷமாக பிரேமலதா பதிலளித்ததின் பின்னணியில் விஜய் மீது உள்ள கோபம் தான் என கூறப்படுகிறது.

மகன் சண்முக பாண்டியன் நடித்த சகாப்தம் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு விஜயகாந்த் நேரடியாக விஜய்யை தொலைபேசியில் அழைத்தும் அந்த நிகழ்ச்சிக்கு விஜய் வர வில்லை, மேலும் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாத விஜயகாந்தை ஒரு முறை கூட நேரில் சந்தித்து உடல்நலம் விசாரிக்க விஜய் வரவில்லை, அந்த வகையில் தன்னுடைய கணவரால் இன்று சினிமாவில் உச்சம் பெற்ற விஜய்க்கு நன்றி இல்லையே என்கிற கோபத்தின் வெளிப்பாடு தான் பிரேமலதா சமீபத்திய பேட்டியில் விஜயை எச்சரிக்கும் வகையில் பேசியது என்கிற விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.