ஏ.ஆர்.ரகுமான் செய்த தவறை செய்து நான் அசிங்க படணுமா.? விஜய் போட்ட அதிரடி உத்தரவு…

0
Follow on Google News

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர். இவரது படங்கள் வெளியாகும் நாள், அவரது ரசிகர்களால் திருவிழா போல கொண்டாடப்படுகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். அனிருத் இசையில் வெளியான “நா ரெடி தான்” என்ற பாடல், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படத்தின் அடுத்த பாடல், வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு இப்போதே கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டன. இந்த நிலையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஜய்யின் ஆடியோ வெளியீட்டு விழா என்றாலே நிச்சயமாக குட்டி கதை இருக்கும். சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் ரஜினி கூறிய கழுகு, காக்கா கதை மக்களிடையே பெரிதாக பேசப்பட்டது. இது விஜய் ரசிகர்களை கோபமடைய வைத்தது. இதனால் இதற்கு பதில் சொல்லும் வகையில் விஜய்யின் பேச்சு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, மதுரை அல்லது கோயம்புத்தூரில் நடக்கும் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் வழக்கம் போல் சென்னையில் தான் இசை வெளியீட்டு விழா நடக்கப்போவதாக கூறப்படுகிறது.

மேலும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற 30ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் விஜய்யின் பேச்சு என்னவாக இருக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை எந்த நிறுவனம் நடத்த உள்ளது என்பது கேள்வியாகியுள்ளது.

Actc நிறுவனத்துடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரியை நடத்திய இதே நிறுவனம் மிகப்பெரிய வேலை ஒன்றை பார்த்து விட்டது. அதனால் ரகுமான் மிகப்பெரிய சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். அதாவது சென்னையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த நாளன்று மழை பெய்த காரணத்தினால் ரசிகர்களின் நலன் கருதி இசை நிகழ்ச்சி வேறு ஒரு நாளுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இப்படியான நிலையில் சென்னை அடுத்த பனையூரில் நேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

உரிய டிக்கெட் இருந்தும் பலரால் நிகழ்ச்சியை பலரால் காண முடியவில்லை. இதனால் ஆவேசத்தில் இசை நிகழ்ச்சியே தேவையில்லை’ என சிலர் டிக்கெட்டுகளை கிழித்தெறிந்து வீடு திரும்பினர். இதனால் பாதிக்கப்பட்ட ரசிகர்கள் தங்களின் வருத்தங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் திரும்பிச் சென்றவர்களுக்கு டிக்கெட் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும், இல்லையெனில் வேறு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பலர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கும் உள்ளானதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உஷார் அடைந்த தளபதி விஜய், Actc நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டாம், என்று கூறிவிட்டாராம். இதனால் லியோ படத்தின் இசையை வெளியிட்டு விழா நடத்தும் உரிமை வேறொரு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்நிலையில் நல்ல வேலை விஜய் சுதாரித்து கொண்டு Actc நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை, இல்லையென்றால் ஏ.ஆர்.ரகுமான் போன்று அசிங்கப்பட்டு, மக்கள் காரி துப்பும் சூழலுக்கு தள்ளப்படலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.