கடன் கொடுத்தவர்கள் கடும் டார்ச்சர்… வீடும் போச்சு… விஜய் சேதுபதியின் Benze காரும் போச்சு…

0
Follow on Google News

ராஜபாளையத்தில் பிறந்த விஜய் சேதுபதியின் சிறு வயதில் அவருடைய குடும்பம் வறுமையில் பாதிக்கப்பட்டிருந்தது. விஜய் சேதுபதியுடன் இரண்டு சகோதரர்கள் ஒரு சகோதரி என விஜய் சேதுபதியை சேர்த்து மொத்தம் நான்கு குழந்தைகளுக்கு தந்தையான காளிமுத்து சிவில் இன்ஜினியராக திறமையாக இருந்தாலும் கூட, பணத்தை சரியாக கையாள தெரியாததால் கடன் மேல் கடன்.

ஒரு கட்டத்தில் கடனை அடைக்க முடியாமல், கடன் காரர்கள் தொல்லை தாங்க முடியாமல், ராஜபாளையத்தில் தனக்கு சொந்தமாக இருந்த ஒரு வீட்டையும் கடனால் விற்பனை செய்துவிட்டு குடும்பத்துடன் சென்னை வருகிறார் விஜய் சேதுபதி தந்தை காளிமுத்து. இந்த நிலையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் விஜய் சேதுபதி வளர்ந்து அக்கவுண்டிங் வேலைக்கு செல்கிறார்.

அதன் பின்பு துபாய்க்கு வேலைக்கு செல்கிறார், எப்படியாவது குடும்பத்தை காப்பாற்றி ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. மீண்டும் துபாயிலிருந்து சென்னை வருகிறார். அவருக்கு சினிமா மீது இருந்த மோகம் சினிமாவிற்குள் நுழைந்து விட்டால் இன்னும் நிறைய சம்பாதிக்கலாம், குடும்பத்தை நன்றாக வைத்துக் கொள்ளலாம் என்று சினிமாவில் வாய்ப்பு தேடி அலைகிறார் விஜய் சேதுபதி.

இந்த இடைப்பட்ட காலத்தில் விஜய் சேதுபதிக்கு திருமணம் ஆகுது, மனைவிக்கு தெரியாம விஜய் சேதுபதி சினிமா வாய்ப்பு தேடினாலும் ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பே கிடைக்காததால், விஜய் சேதுபதி மனைவி இந்த சினிமா வாய்ப்பு தேடுவதை விட்டுவிட்டு வேறு ஒரு வேலைக்கு போங்க என்று விஜய் சேதுபதியிடம் மன்றாடி கேட்கிறார், விஜய் சேதுபதியும் ஒரு பொய் சத்தியம் செய்துவிட்டு இனிமேல் நான் சினிமா வாய்ப்பு தேடுவதை நிறுத்தி விடுகிறேன் என தெரிவித்துவிட்டு மனைவிக்கு தெரியாமல் சினிமா வாய்ப்பை தேடுகிறார்.

இப்படி விஜய் சேதுபதியின் போராட்ட வாழ்க்கை சென்று கொண்டிருக்க, 2009 ஆம் ஆண்டு ஒரு ஷார்ட் பிலிம் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது, அந்த ஷார்ட் பிலிம்ல் விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கிறார், இரவு நேர சூட்டிங் விஜய் சேதுபதி தந்தை உடல்நிலை சரியில்லாமல் மிகவும் சீரியஸாக இருப்பதாக அவருக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது ஷார்ட் பிலிம் ஷூட்டிங் முடித்துவிட்டு தன் தந்தையை விஜய் சேதுபதி பார்க்க செல்கிறார், தந்தைக்கு எந்த ஒரு நினைவும் இல்லை.

அடுத்த நாள் காலையில் டிசம்பர் 24 2009இல் விஜய் சேதுபதி தந்தை இறந்து விடுகிறார். அடுத்த வருடம் அதே டிசம்பர் 24 2010 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி கதாநாயகன் அறிமுகமாகும் தென்மேற்கு பருவக்காற்று படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைய, தமிழ் சினிமாவில் கதாநாயகனாக உருவெடுக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் இந்த சந்தோஷத்தை தன் தந்தையிடம் பகிர்ந்து கொள்ள முடியலையே என்று ஒரு பக்கம் வேதனையில் அடைகிறார் விஜய் சேதுபதி.

இதனை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை அதன் அடிப்படையில் செகண்ட் ஹேண்டில் பென்ஸ் கார் வாங்குகிறார் விஜய் சேதுபதி, அந்த பென்ஸ் கார் விஜய் சேதுபதி வாங்கியதில் இருந்தே தொடர்ந்து நான்கு படங்கள் தோல்வி, இந்த நிலையில் பென்ஸ் கார் வந்ததிலிருந்து தான் சினிமாவில் சரிவை சந்திக்க நேரிடுகிறது என்று குடும்பத்தார் காரை விற்க சொல்கிறார்கள்.

அதன் பின்பு விஜய் சேதுபதி பெண்ஸ் காரை விற்று இருக்கிறார். இதன்பு அடுத்தடுத்து விஜய் சேதுபதி நடித்த படங்கள் வெற்றியடைந்தது தொடர்ந்து புது பென்ஸ் காரை வாங்கி அந்த காரில் பெண் முத்திரையை எடுத்துவிட்டு வி என்ற தன்னுடைய முதல் எழுத்தை வைக்கிறார், இதன் பின்பு விஜய் சேதுபதி தொடர் வெற்றி அடைந்தது மட்டுமில்லாமல், சினிமா இண்டஸ்ட்ரியில் பென்ஸ் கார் வைத்திருந்தால் தொடர்ந்து சினிமாவில் சரிவை சந்திப்போம் என்கின்ற ஒரு பிம்பத்தையும் உடைத்து விட்டார் விஜய் சேதுபதி.

ஆனால் விஜய் சேதுபதி பென்ஸ் கார் வாங்கி அந்த காரில் முன் பக்கம் benz சிம்பிலை எடுத்துவிட்டு வி என்ற சிம்பிலை மாற்றியதால் தான் அவருக்கு தொடர்ந்து வெற்றி அடைகிறது, அந்த வகையில் பென்ஸ் கார் வாங்குகின்றவர்கள் அந்த பென்ஸ் சிம்பிலை எடுத்துட்டு தங்களுக்கு லக்கியான ஒரு இன்சியலை போட்டால் வெற்றி அடையலாம் என்றும் என்கின்ற ஒரு பேச்சும் உலாவிக் கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here