நடிகர் விஜய் சேதுபதி 1996ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான லவ் போர்ட்ஸ், கார்த்திக் நடிப்பில் வெளியான கோகுலத்தில் சீதை ஆகிய படங்களில் கண்ணுக்கே தெரியாத வேடங்களில் நடித்து விட்டு, அடுத்த பட வாய்ப்புகள் இல்லாமல் துபாய்க்கு வேலைக்கு சென்று விட்டார், இதன் பின்பு மீண்டும் சினிமா மீது கொண்ட மோகத்தினால், சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் தேடி தமிழகம் வந்தவர்.
2004 தொடங்கி 2010 வரை சுமார் 10 ஆண்டுகள் கண்ணுக்கே தெரியாத சிறு சிறு வேடங்களில் ஆறு படங்களின் நடித்து வந்தவர். 2010ல் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதநாயகனாக அறிமுகமாகி மிக பெரிய ஹிட் கொடுத்தார், இதன் பின்பு விஜய் சேதுபதிக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து பிசி நடிக்கராக வளம் வந்தார், இந்நிலையில், ரம்மி படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நெருக்கமானார்.
இதன் பின்பு விஜய் சேதுபதி சிபாரிசில் பண்ணையாரும் பத்மினி, தர்மதுரை ஆகிய படங்களில் அடுத்தடுத்து அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் பின்பு விஜய் சேதுபதி உடன் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கூட இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்ட கிசு கிசுக்கள் தொடர்ந்து வெளியானது. ஐஸ்வர்யா ராஜேஷ் மீது உள்ள நெருக்கம் காரணமாக அவருக்கு புதிய வீடு ஓன்று விஜய் சேதுபதி பரிசளித்ததாக கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் ஐஸ்வர்யா ராஜேஷ் உடனான விஜய்சேதுபதியின் நெருக்கம் அதிகரித்து கொண்டே சென்ற நிலையில், கா.பெ.ரணசிங்கம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை தனக்கு ஜோடியாக நடிக்க இயக்குனரிடம் சிபாரிசு செய்து ஜோடி சேர்ந்த விஜய் சேதுபதி. இந்த படப்பிடிப்பு காலத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடனான நெருக்கம் எல்லை மீறி சென்றதாக கூறப்படும் நிலையில், இந்த தகவல் விஜய் சேதுபதி மனைவி கவனத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இது ரெம்ப நாட்களாக நடந்து வருகிறது, ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வீடு கூட கணவர் விஜய் சேதுபதி வாங்கி கொடுத்த விஷயம் அறிந்த அவரது மனைவி, கோபத்தின் உச்சிக்கே சென்று குடும்பத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து விஜய் சேதுபதியை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார் என கூறப்படும் நிலையில், ஒரு வழியாக விஜய் சேதுபதி தனது மனைவியை சமாதானம் செய்து அதன் பின்பு ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் பேசுவது கூட கிடையாது என சினிமா வட்டாரத்தில் கூறப்படுவது குறிப்பிடதக்கது.