சமீபகாலமாகவே பாலிவுட் சினிமாவை போல தமிழ் சினிமாவிலும் நெப்போட்டிசம் அதிகரித்து வருகிறது. பாலிவுட்டில் தான் மிகப்பெரிய நட்சத்திர குடும்பத்தைச் சேர்ந்த பிரபலங்களின் வாரிசுகள், அவர்களின் மூலமாகவே சினிமாவில் அறிமுகமாகி எந்த ஒரு கஷ்டமும் படாமல் தனக்கென தனி அடையாளத்தை பிடித்து விடுவார்கள். அதனைப் போல் தற்போது தமிழ் சினிமாவிலும் பிரபலமான நடிகர்களின் வாரிசுகள் படையெடுப்பு அதிகரித்து வருகிறது.
அப்படி என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியின் நிலை தான் தற்போது பல விமர்சனங்களை பெற்றுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி, ஆரம்ப காலத்தில் ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடையில் வேலை பார்த்து, பிறகு சினிமாவில் நுழைந்து, மிகவும் கஷ்டப்பட்டு, தனது திறமையை வெளிப்படுத்தி, இன்று மிகப்பெரிய நடிகராக உருவெடுத்துள்ளார்.
மேலும் சமீபத்தில் தான், தனது ஐம்பதாவது படமான மகாராஜா என்ற படத்தையும் வெற்றிகரமாக முடித்து, ஹிட் கொடுத்திருந்தார். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று முன்னணி நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்த விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் அவரின் தந்தை நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் மற்றும் சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருந்தார்.
ஆனால் தற்போது பார்த்தால் கிடுகிடுவென வளர்ந்து ஹீரோவாகவே நடித்துவிட்டார். இந்நிலையில் அவர் வளர மட்டுமில்லை, அவரது வாய்க்கொழுப்பும் அதிகரித்துவிட்டது என ரசிகர்கள் அவரை ட்ரோல் மெட்டீரியல் ஆக்கிவிட்டனர். சூர்யா சேதுபதியின் பீனிக்ஸ் என்ற, முதல் படத்தை பிரபல டான்ஸ் மாஸ்டரான அனல் அரசு இயக்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கான பூஜை ஆரம்பித்த தினத்தில் தான் சூர்யா சேதுபதிக்கும் ராகு காலம் ஆரம்பித்துள்ளது.
அன்று பேட்டியளித்த அவர் மிகவும் தெனாவெட்டாக, நான் என்னுடைய அப்பா பெயரில் சினிமாவுக்கு வர முடிவு செய்யவில்லை, நான் வேறு என் அப்பா வேறு என்றும், இந்த படத்தில் கூட என் பெயரை சூர்யா என்று தான் குறிப்பிட சொல்லி இருக்கிறேன், சூர்யா சேதுபதி என்று போடவில்லை என வார்த்தையை அளந்து பேசாமல் சடசடவென்று பேசியிருந்தார்.
சூர்யா சேதுபதியின் இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் இவர் திமிராகவும், தலைகணத்துடனும் பேசுவது போல் இருக்கிறது, விஜய் சேதுபதி எவ்வளவு தன்மையுடன் பேசுவார், அதில் சிறு துளி கூட உங்களிடம் இல்லை என கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். மேலும் உனது அப்பா இல்லை என்றால் உன்னுடைய பெயர் யாருக்கும் தெரியாது, இவ்வளவு சிறிய வயதில் ஹீரோவாகியிருக்க முடியாது, முதலில் சரியாக பேச கற்றுக் கொள்ளுங்கள் என்றும் கண்டித்து வந்தனர்.
இந்நிலையில் தான் அன்று அவர் பேசிய பேச்சுக்கு நேர்மாறாக சூர்யா சேதுபதி செய்துள்ள இந்த காரியம் மீண்டும் ட்ரோல் மெட்டீரியல் ஆகியுள்ளது. அவர் நடித்துள்ள பீனிக்ஸ் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் தனது தந்தையான விஜய் சேதுபதியை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார், இந்நிலையில் தான் பட பூஜையில், ஏதோ அப்பாவின் பெயரை பயன்படுத்த மாட்டேன் என்று பில்டப் கொடுத்துவிட்டு, தற்போது ஏன் இந்த விழாவில் படத்தை Promote பண்ணும் விதமாக உங்கள் தந்தை வந்திருக்கிறார்,
அப்பா பெயரில் வரவேண்டாம் என்று நினைத்து விட்டு எதற்காக விழாவிற்கு அப்பாவை அழைத்துள்ளீர்கள் என்று பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். பத்திரிகையாளர்கள் கேட்ட இந்த கேள்வியை பார்த்து திகைத்துப் போன சூர்யா சேதுபதி அதற்கு மழுப்பும் விதமாக பதில் அளித்துள்ளார். இருப்பினும் சூர்யா சேதுபதியின் இந்த பேச்சை கேட்ட நெட்டிசன்கள், தம்பி, பொது இடங்களில் பேசும்போது பார்த்து பேச வேண்டும், ஏதோ ஒன்றை பேசிவிட்டு பின்பு வருந்துவதில் எந்த பயனும் இல்லை என்றும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.