கதாநாயகனாகும் விஜய் சேதுபதி மகன்… இவருக்கு இவ்வளவு பெரிய மகனா.. இயக்குனர் யார் தெரியுமா.?

0
Follow on Google News

சென்னையில் பட்ட படிப்பு முடித்து துபாயில் வேலை செய்து வந்த விஜயசேதுபதி, பின் வேலை பிடிக்காமல் சென்னை வந்தவர் சினிமா துறையில் நுழைந்தார், தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜயசேதுபதி, செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நண்பராக சில காட்சிகளில் ஒரு ஓரமாக இடம் பிடித்திருப்பார், இதே போன்டர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பார்.

சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி போதிய வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டபட்டுள்ளார். இடையில் சிறு சிறு வேடங்கள் கூட கிடைக்காமல் வருமானம் இல்லாமல் சாப்பிட பணமில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். அதே சமயம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புக்காக போராடி வந்த விஜய்சேதுபதி ஒரு கட்டத்தில் சினிமா துறையை விட்டு வெளியேறி மற்றொரு வேலைக்கு செல்ல தயாராகி வேலையும் தேட தொடங்கியுள்ளார்.

அப்போது தான் அவருக்கு தென் மேற்கு பருவக்காற்று படத்தில் கதநாயகனாக நடிக்கும் வாய்ப்பை அந்த படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி கொடுத்தார். இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதில் கதாநாயகனாக நடித்த விஜய்சேதுபதிக்கு அடுத்தடுத்து படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்து குவிந்தது. இதனை தொடர்ந்து கடும் போராட்டத்துக்கு பின்பு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தொடர்ந்து எந்த ஒரு கதாபத்திரமாக இருந்தாலும் தன்னுடைய இமேஜை பற்றி சிந்திக்காமல் நடித்து வருகிறார்.

ஹீரோவாக நடித்து வாங்கும் சம்பளத்தை விட, வில்லனாக நடிக்க அதிகம் சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக, தன்னுடைய ஹீரோ இமேஜ் பற்றி கவலை படாமல், சற்றும் தயங்காமல் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க தொடங்கினார் விஜய் சேதுபதி. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி அடுத்தடுத்து தெலுங்கு ஹிந்தி படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பொதுவாக சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் பலர் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு பல துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்து இருந்தாலும், அவர்கள் கடும் போராட்டத்திற்கு பின்பு சினிமாவில் தங்களுக்கான ஒரு இடத்தை பிடித்து விட்டால், அதன் பின்பு அவர்களுடைய வாழ்க்கையே சொர்க்கமாக மாறிவிடும்.

எந்த துறையிலும் இல்லாத அளவுக்கு சினிமா துறையில் அதிக சம்பளம் மற்றும் சொகுசு வாழ்க்கை என அவர்களின் என வாழ்க்கையை அணு அணுவாக அனுபவிக்க தொடங்கிவிடுவார்கள் நடிகர் நடிகைகள், அந்த வகையில் தன்னைப் போன்று தன்னுடைய மகனும் வாழ்க்கையும் ரசித்து ருசித்து வாழ வேண்டும் என்றால் சினிமா துறை தான் சரியானதாக இருக்கும் என்று முடிவு செய்த விஜய் சேதுபதி.

தன்னுடைய மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் வேலைகளில் மிக தீவிரமாக இறங்கியுள்ளார். தற்பொழுது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் விஜய் சேதுபதி மகனை இளம் வயதிலேயே சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், தன்னைப்போல காலம் கடந்து தாமதமாக சினிமாவிற்குள் மகன் நுழைவதை விஜய் சேதுபதி விரும்பவில்லை, அதனால் பல இயக்குனர்களிடம் மகனுக்கு கதை கேட்டு வரும் விஜய் சேதுபதி விரைவில் மகனின் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்க படுகிறது.

பாலாவால் உடைந்த சிவகுமார் குடும்பம்… ஜோதிகா எடுத்த அதிரடிக்கு பின்னனியில் பாலா…