விஜய் சேதுபதி சோலி முடிந்தது… ஓவர் ஆட்டம் போட்டு அதள பாதாளத்தில் விழுந்த பரிதாபம்..

0
Follow on Google News

துபாயில் வேலை செய்து கொண்டிருந்த விஜய் சேதுபதி, சினிமா ஆசையில் கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு கதாபாத்திரங்களில் பத்து வருடங்களுக்கு மேலாக நடித்து கொண்டே சினிமாவில் போராடி கொண்டிருந்த காலகட்டத்தில், இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமமாகி முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

பணம் கிடைத்தால் போதும் என படத்தின் கதைக்கு முக்கிய துவம் அளிக்காமல் ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் விஜய் சேதுபதி. இந்த நிலையில், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதி கமிட்டாகி இருந்தார், இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. விரைவில் இந்த படத்தில் படப்பிடிப்பு தொடங்கபட இருக்கிறது.

சுமார் 15 கோடி வரை சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதி, அரண்மனை 4 படத்தில் நடிக்க இயக்குனர் சுந்தர் சி 40 நாள் கால் சீட் கேட்டு 5 கோடி சம்பளம் பேசியுள்ளார். இதை கேட்டு ஷாக்கான விஜய் சேதுபதி, சார் நான் ஒரு படத்திற்கு 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறேன் என கேட்க, உங்களுக்கு இப்ப சினிமாவில் மார்க்கெட் இல்லை, அதனால் 5 கோடி தான் கொடுக்க முடியும் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

சார் அதற்காக மூன்று மடங்கு குறைத்தால் எப்படி, ஒரு 12 கோடி கொடுங்க என விஜய் சேதுபதி கேட்க, அதெல்லாம் முடியாது 5 கோடி தான் என சுந்தர் சி தெரிவிதித்துள்ளார். அதற்கு விஜய் சேதுபதி முடிவாக 10 கோடி கொடுங்க என விஜய் சேதுபதி தெரிவிக்க, நானும் முடிவா சொல்கிறேன் 40 நாள் கால் சீட் 5 கோடி சம்பளம் என உறுதியாக சுந்தர் சி தெரிவித்துவிட்டார், இதனால் அரண்மனை 4 படத்தில் இருந்து விஜய் சேதுபதி வெளியேறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் சுந்தர் சி நடிக்க இருக்கிறார். இதே போன்று விஜய் சேதுபதி வில்லனாக நடித்த மாஸ்டர் படம் மிக பெரிய வெற்றியை பெற்ற பின்பு, மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் அடுத்து இரண்டு படங்களில் விஜய் சேதுபதியை கமிட் செய்து அந்த இரண்டு படத்திற்கு அட்வான்ஸ் தொகையும் கொடுத்து இருந்தார். ஆனால் தற்பொழுது விஜய் சேதுபதிக்கு மார்க்கெட் இல்லாததால் விஜய் சேதுபதி நடித்த படத்தின் சட்டிலைட் ரைட்ஸ் வாங்க கூட ஆட்கள் இல்லை.

இதனால் விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு நேரடியாக சென்ற தயாரிப்பாளர் லலித் உங்கள் கால் சீட்டு எனக்கு தேவையில்லை, நான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி தாருங்கள் என்று பிடிவாதமாக இருந்து கொடுத்த பணத்தை திரும்பி வாங்கிவிட்டு திரும்பியுள்ளார். அதே போன்று விஜய் சேதுபதியை தனியாக சந்தித்து கால் சீட்டு கேட்டு இயக்குனர்கள், மற்றும் தயாரிப்பாளர்கள் சென்றால்,

எப்போதும் விஜய் சேதுபதி உடன் இரண்டு பெண்கள் இருக்கிறார்களாம், தன்னை சந்திக்க வருகிறவர்களிடம் அந்த இரண்டு பெண்களையும் உதவியாளர்கள் என்று அறிமுகம் செய்து வைக்கும் விஜய் சேதுபதி, இயக்குனர் விஜய் சேதுபதியிடம் கதை சொன்னால், தனது பெண் உதவியாளரிடம் கதை சொல்லுங்க என்கிறாராம் விஜய் சேதுபதி, மேலும் ஹிந்தி படப்பிப்புக்கு முன்பை செல்லும் போதும் அந்த இரண்டு பெண் உதவியாளர்களை கூடவே அழைத்து செல்கிறாராம் விஜய் சேதுபதி.

அந்த அளவுக்கு உதவியாளராக இருக்கும் இரண்டு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் விஜய் சேதுபதியின் நடவடிக்கைகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் மற்றும் அவருடை மார்க்கெட் சரிவின் காரணமாக இனி சினிமாவில் விஜய் சேதுபதி சோலி முடிந்தது என கூறப்படுகிறது.