சத்தமே இல்லாமல் உதவி செய்த விஜய் சேதுபதி… மற்ற நடிகர்களுக்கு முன்னுதாரணம் விஜய் சேதுபதி..

0
Follow on Google News

பட்டத்தின் பெயருக்கேற்பவே, மக்கள் செல்வனாக மாறி, இவர் பலருக்கும் உதவி செய்து வருவது தெரியவந்திருக்கிறநு. அந்த வகையில் தான் தற்போது காமெடி நடிகர் ஒருவரின் மகனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்தி இருக்கிறார். அதுவும் அவர் எவ்வளவு ரூபாய் கட்டணமாக செலுத்தியிருக்கிறார் என கேட்டால் ஷாக் ஆகிவிடுவீர்கள்.

மக்கள் செல்வன் என விஜய் சேதுபதியை ரசிகர்கள் சும்மா ஒன்றும் கொண்டாடவில்லை, அவர் பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார், பல்வேறு நலிந்த கலைஞர்களுக்கும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும் நடிகர்களுக்கும் முதலில் ஓடி வந்து, யாருக்கும் தெரியாமலேயே பண உதவி செய்து வருகிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில் பலரும் மீடியாவிற்கு தகவல் தெரிவித்து, பப்ளிசிட்டிக்காக உதவி செய்து வரும் இந்த காலகட்டத்தில், யாருக்கும் தெரியாமல் இவர் பலருக்கு உதவி செய்து வருவதை மக்களும் பாராட்டி வருகின்றனர். அப்படிதான் தற்போது மறைந்த காமெடி நடிகர் விவேக் உடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்த நடிகர் தெனாலி அவர்களின் மகனான வின்னரசனுக்கு தான் கல்லூரி கட்டணம் செலுத்தி இருக்கிறார்.

அதுவும் அவர் டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றி வைத்திருப்பதும், விஜய் சேதுபதி தான். டாக்டர் எம்ஜிஆர் யுனிவர்சிட்டியில் பிசியோதெரபி படித்து வரும் நடிகர் தெனாலியின் மகன் வின்னரசன் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையில் இருப்பதை அறிந்த நடிகர் பாவா லட்சுமணன், அவரிடம் விஜய் சேதுபதியை போய் பார்க்கலாம், அவர் கண்டிப்பாக உதவி செய்வார் என அழைத்து சென்றிருக்கிறார்.

பின்னர் அங்கு சென்று, நடிகர் விஜய் சேதுபதியிடம் நேரில் நிலமையை கூறியிருக்கின்றனர். அப்போது அவர் கொஞ்சம் கூட யோசிக்காமலும், தயங்காமலும், 1000, 2000 அல்ல, உடனடியாக 76 ஆயிரம் ரூபாய்யை எடுத்து வந்து அவரின் கல்லூரி கட்டணத்தை கட்டியிருக்கிறார். இதனை கேட்ட ரசிகர்கள் பலரும், இவ்வளவு பணத்தை எந்த நடிகர்களும் உதவி செய்ய மாட்டார்கள்,

ஆனால் நீங்கள் செய்திருக்கிறீர்கள், நீங்கள் எப்போதும் மக்கள் செல்வன் தான் என்றும், ஒரு வருங்கால பிசியோதெரபி டாக்டரை உருவாக்கி உள்ளார் விஜய் சேதுபதி என்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு என் சந்ததி கல்வியிலும், வருங்காலத்தில் பொருளாதாரத்திலும் உயர, நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவியை, வாழ்நாளில் நானும், என் மகனும் மறக்கவே முடியாது என காமெடி நடிகரான தெனாலியும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துருக்கிறார்.