தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளும், பேச்சுகளும் தொடர்ந்து அரங்கேறி வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என ஒவ்வொரு முறையும் இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் முதல் முடியும் வரை பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்து கொண்டுதான் இருக்கிறது.
இது தொடர்பாக பலமுறை சில சமூக ஆர்வலர்களும் புகார் கொடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் இதுவரை கலாச்சார சீர்கேடு என்று விமர்சனத்திற்கு உள்ளான பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்பொழுது குடிசைத் தொழில் செய்து கொண்டிருக்கும் தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் அளவிற்கு கார்ப்பரேட் நிறுவனத்திடம் காசு வாங்கி கூவ ஆரம்பித்துவிட்டது இந்த நிகழ்ச்சி என்கின்ற கொந்தளிப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் விஜய் சேதுபதி முன்னிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேறிய சம்பவம் தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களை கொந்தளிப்பை ஏற்படுத்த செய்திருக்கிறது. காரைக்குடியில் ஆத்தங்குடி டைல்ஸ் பல நூறு ஆண்டுகள் மேலாக பாரம்பரிய முறையில் வாரி மண் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறத. சீதோசன நிலைக்கு ஏற்றவாறு உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் குடிசைத் தொழிலாக இந்த ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் மற்றும் இன்றி கேரளா கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு இந்த டைல்ஸ் அனுப்பப்பட்டு வருகிறது, இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஆத்தங்குடி டைல்ஸ் உண்மையானது இல்லை, கே ஏ ஜி டைல்ஸ் தான் அசல் ஆத்தங்குடி டைல்ஸ் என்று அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் தீபக் தெரிவித்து இருந்தார்.
இந்த கருத்து தான் தற்பொழுது மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்திடம் காசை வாங்கிக்கொண்டு குடிசைத் தொழில் செய்து வரும் ஆத்தங்குடி டைல்ஸ் தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் வேலையைத்தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கிறது. அதையும் கைகட்டி வாய் மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி என பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த பலரும் விமர்சனம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக ஆத்தங்குடி டைல்ஸ் தொழிலாளர்கள் காரைக்குடி டிஎஸ்பி இடம் புகார் ஒன்றை கொடுத்துகிறார்கள். அதில் விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீதும், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி மீதும், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லை என்றால், முதல்வர், பிரதமர், மத்திய தொழில்துறை அமைச்சகம் என அனைத்திலும் புகார் கொடுக்கப்படும் என்று ஆத்தங்குடி டைல்ஸ் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி சமுதாயத்திற்கு சீரழிவை மட்டும் ஏற்படுத்தவில்லை, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் காசை வாங்கிக்கொண்டு குடிசைத் தொழிலாளர்கள் வயிற்றிலும் அடிக்க ஆரம்பித்துவிட்டது, அந்த வகையில் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக முழுவதும் உள்ள மக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.