விஜய் சேதுபதி – சீனுராமசாமி என்ன பிரச்சனை,.. என்ன தான் இருந்தாலும் ஏற்றி விட்ட ஏணி இல்லையா.?

0
Follow on Google News

அப்போது தான் அவருக்கு தென் மேற்கு பருவக்காற்று படத்தில் கதநாயகனாக நடிக்கும் வாய்ப்பை அந்த படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி கொடுத்தார். இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதில் கதாநாயகனாக நடித்த விஜய்சேதுபதிக்கு அடுத்தடுத்து படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்து குவிந்தது. இதனை தொடர்ந்து கடும் போராட்டத்துக்கு பின்பு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தொடர்ந்து எந்த ஒரு கதாபத்திரமாக இருந்தாலும் தன்னுடைய இமேஜை பற்றி சிந்திக்காமல் நடித்து வந்தார்.

இதனிடையே தனக்கு வாழ்கை கொடுத்த இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை போன்ற படங்களில் நடித்தார். விஜய் சேதுபதி பல படங்களில் நடித்தாலும் அவருக்கென ஒரு அங்கீகாரம் பெற்று தந்த படம் சீனு ராமசாமி இயக்கத்தில் வந்த தென் மேற்கு பருவக்காற்று மற்றும் தர்மதுரை ஆகிய இரண்டு படங்கள் தான். தர்மதுரை படம் அனைவராலும் மிக பெரிய பாராட்டை பெற்று தந்தது.

விஜய் சேதுபதி நடிப்பில் தர்மதுரை படத்தை இயக்கிய பின்பு மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படம் இயக்க சீனுராமசாமி முடிவு செய்த போது, விஜய் சேதுபதியிடம் கால் சீட் கிடைப்பதில் முறையான தகவல் சீனு ராமசாமிக்கு கிடைக்க வில்லை, இதற்கு காரணம், விஜய் சேதுபதி வியாபார நோக்கில் சினிமாவை அணுக தொடங்கியதால், சீனு ராமசாமிக்கு ஒரு படத்திற்கு கொடுக்கும் கால் சீட்டுக்கு, இரண்டு அல்லது மூன்று படங்களில் கதையை பற்றி சிந்திக்காமல் போகிற போக்கில் நடித்தால் அதிகம் பணம் அதிகம் கிடைக்கும் என்பது விஜய் சேதுபதியின் திட்டமாக இருந்தது.

இருந்தும் பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு பின்பு மாமனிதன் படத்தில் விஜய்சேதுபதி , சீனு ராமசாமி கூட்டணி இணைந்தது. இந்நிலையில் மீண்டும் சீனு ராமசாமி இயக்கத்தில் இனி விஜய் சேதுபதி நடிப்பதற்கான வாய்ப்பு இல்லை என சினிமாவாவில் கிசு கிசுக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சீனு ராமசாமி பேசுகையில்.

பொதுவெளியில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்களே பெரும் கவலையாக உள்ளது. என் மனதில் பட்டதை என்னால் பேச முடியவில்லை. யாரையும் பாராட்ட முடியவில்லை மாமனிதன் திரைப்படம் திரையரங்குகளில் 20 சதவீத பார்வையாளர்களுடன் ஓடி முடித்துள்ளது. நீங்க எட்டு படம் பண்ணியிருக்கீங்க, எல்லா மக்களும் ஒரு படத்தை டிவியில் பார்ப்பார்கள் என்றார்கள். எட்டுப் பிள்ளைகள் இருந்தாலும், உயிரோடு இருக்கும் குழந்தையைப் பார்த்துக் கொள்வதில்லையா? ஆனால் இந்த ஒரு குழந்தை தற்போது உலக ஒலிம்பிக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

விஜய் சேதுபதியின் நடிப்பு உலகம் முழுவதும் தெரிய வேண்டும். மாமனிதன் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 650 முறை திரையிடப்பட்டுள்ளது. இனி விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர வாய்ப்பு இல்லை. 12 வருடங்களில் விஜய் சேதுபதியை வைத்து நான்கு படங்கள் இயக்கியுள்ளேன். நான் இறந்தாலும் இந்தப் படங்கள் பேசும் என விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைய வாய்ப்பு இல்லை என சீனு ராமசாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.