நடிகர் விஜய் நடிப்பில் தற்பொழுது வெளியாகி திரையரங்கில் ஓடி கொண்டிருக்கும் படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்சர் தயாரித்தது. நெல்சன் திலிப்குமார் இயக்கியிருந்தார். நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான கோலமாவு கோகிலா, மற்றும் டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது, இதில் டாக்டர் படம் சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் மறு வாழ்வு கொடுத்த படம் என்றே சொல்லலாம், அந்த அளவுக்கு வசூலை அள்ளி குவித்த படம் டாக்டர்.
நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான டாக்டர் படம் மிக பெரிய வெற்றி பெற்று இருந்ததால், அவருடைய அடுத்த இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் மீது சினிமா ரசிர்கர்களுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் பார்த்த விஜய் ரசிகர்களுக்கே பீஸ்ட் பிடிக்கவில்லை. முதல் நாளே பீஸ்ட் மண்ணை கவ்வி இரண்டாம் நாள் பீஸ்ட் படம் வெளியிட்ட பல திரையரங்குகள் படம் பார்க்க ஆட்கள் இல்லாமல் காற்று வாங்கியது.
விஜய் சினிமா கேரியரில் சுறா, பைரவா போன்ற மோசமான படங்கள் வரிசையில் இடம் பிடித்தது பீஸ்ட். இந்த படம் தோல்விக்கு இயக்குனர் நெல்சன் தான் காரணம் என விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இந்த படம் மண்ணை கவ்வியதற்கு நடிகர் விஜய் தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. முன்னனி இயக்குனர்கள் நடிக்கும் படங்களில் கதை விவகாரங்களில் தயாரிப்பு நிறுவனம் மூக்கை நுழைக்காது என்று கூறப்படுகிறது.
அந்த வகையில், பீஸ்ட் படத்தின் கதை, இயக்குனர் என அனைத்தும் விஜய் தான் முடிவு செய்துள்ளார். தயாரிப்பு நிறுவனம் விஜய்யிடம் கால் சீட் மட்டும் வாங்கியுள்ளது. விஜய் கதையில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது, இது நெல்சன் படமே கிடையாது. விஜய் படம் என்றும் சொல்லும் அளவுக்கு விஜய்யின் தலையீடு இந்த படத்தில் இருந்துள்ளது. அதனால் தான் இந்த படம் மிக பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என கூறப்படுகிறது.
இந்நிலையில் பீஸ்ட் வெளியான பின்பு எதிர்மறை விமர்சனம் அதிகமாக வந்துள்ளது, மேலும் நெல்சன் சினிமா வாழ்க்கை இத்துடன் முடித்துவிடுமோ என்கிற பரபரப்பும் நிலவி வரும் சூழலில், நெல்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நடிகர் விஜய் அவருக்கு ஆறுதல் சொல்லியுள்ளார். கதையில் மாற்றம் செய்தது என் மீது தான் தவறு. நீங்கள் கூறியது போன்று உங்கள் ஸ்டைலில் எந்த படத்தை எடுத்திருக்க வேண்டும்.
கவலை படாதீங்க நெல்சன். சினிமாவில் இது போன்ற வீழ்ச்சிகள் வருவது சகஜம் தான். நம்ம கண்டிப்பாக மீண்டும் ஒரு படம் சேர்ந்து பண்ணுவோம் என தன்னால் வீழ்ச்சி அடைந்த நெல்சன் இயக்கத்தில் ஒரு படம் நடித்து தருவதாக விஜய் தொலைபேசியில் நெல்சனிடம் ஆறுதல் தரும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் இது வெறும் ஆறுதலுக்காக தான் விஜய் சொன்னாரா.? அல்லது உண்மையிலே சொன்னாரா.? என்பதை உறுதியாக நம்ப முடியாது என சினிமா வட்டாரதத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிட்டத்தக்கது.