விஜய் நடிப்பில் லியோ படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில், லியோ திரைப்படத்தில் இருந்து நான் ரெடி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்று இருந்தாலும், நடிகர் விஜயே பாடியிருந்த இந்தப்பாடலில் புகை மற்றும் மது பழக்க வழக்கங்களை பற்றிய வரிகள் இடம் பெற்று இருந்தன இது கடும் எதிப்புக்கு உள்ளானது.
குறிப்பாக அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி ப்ரியா,இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் நடிகர் விஜய்யை கைது செய்யக் கோரி புகார் சில நாட்களுக்கு முன்பு மனு ஒன்றை அளித்தார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜேஸ்வரி பிரியா பேசுகையில், சமீபத்தில் லியோ படத்தின் பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும் என்கின்ற எந்த ஒரு எச்சரிக்கை பதிவு கூட இல்லாமல், அந்த பாடல் வெளியாகியுள்ளது.
அந்தப் பாடலில் இடம்பெற்ற வரிகள் அனைத்துமே புகை மற்றும் மது குறித்து வரிகள் இடம் பெற்று இருந்தது, இது இளைஞர்களையும் சிறுவர்களையும் பாதிக்கும் வண்ணம் அந்த பாடல் வரிகள் அமைந்திருந்தது, அந்த வரிகளை நீக்க வேண்டும் என கூறியும், மேலும் விஜய்க்கு சிறுவர்கள் முதல் ரசிகர்கள் உள்ளனர், அவர் ஏன் சற்றும் சிந்திக்காமல் இப்படி செயல்படுகிறார் என நான் பேட்டி அளித்து இருந்தேன். அந்த பேட்டி அதிகம் பேர் பார்த்து இருந்தார்கள்.
அந்த பேட்டியின் விளைவு விஜய் ஒரு பணம் படைத்த நடிகர் என்பதை நிரூபிப்பதற்காகசமூக வலைதளத்தில் பல போலி கணக்குகளை தொடங்க வைத்து ஆபாசமான வீடியோக்கள், ஆபாச வசனங்கள், மிக கொச்சையான பதிவுகளை பதிந்து, என்னை அச்சுறுத்த வைக்கிறார் விஜய். இதற்கு காரணம் நடிகர் விஜய் தான், அனைத்து பதிவுகளுமே விஜயை டேக்ஸ் செய்து தான் அவருடைய ரசிகர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
அப்படியானால் விஜையிடம் வாங்கிய பணத்திற்கு நாங்கள் வேலை செய்கிறோம் என்பதை விஜய்க்கு தெரியப்படுத்துவதற்காக தான், அவருடைய ரசிகர்கள் அனைத்து பதிவுகளிலும் விஜய்யை டேக் செய்கிறார்கள். குறிப்பாக விஜய் அவர்களுக்கு சிறுவர்கள் ரசிகர்களாக இருக்கும் பொழுது கூடுதலான தாய் உணர்வு இருக்கத்தான் செய்யும்..
விஜய் சிகரெட் வாயிலே சிகரெட் வைப்பதை பார்த்து ஒரு சிறுவன் இதே மாதிரி வைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் உங்களால் தடுக்க முடியுமா என ஆவேசப்பட்ட ராஜேஸ்வரி பிரியா, ஒரு பொது தளத்தில் பெண்கள் வருவதற்கு மிகவும் சிரமப்படுவதற்கு காரணம் மோசமான வார்த்தைகள் தான், கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல், விஜய் ரசிகர்கள் ஒரு பெண்ணை ஆபாசமாக பேசுவதற்கு விஜய் தான் பணம் கொடுத்து தூண்டிவிடுகிறார்.
அதனால் நடிகர் விஜய் கைது செய்ய வேண்டும் என ராஜேஸ்வரி தெரிவித்து இருந்தார் இந்நிலையில் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பாடல் குறித்து கடும் எதிப்பு கிளம்பி வந்த நிலையில், அந்தப்படத்தின் பாடல் வரிகளில் சர்ச்சைக்கு உரிய வரிகள் நீக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தனி ஒரு பெண்ணாக விஜய்க்கு எதிராக களத்தில் இறங்கி எதிர்ப்பு குரல் எழுப்பிய ராஜேஸ்வரிக்கு கிடைத்த வெற்றியாக லியோ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் நீக்கப்பட்டுள்ளதாக பலரும் ராஜேஸ்வரியை பாராட்டி வரும் நிலையில், இது தொடர்பாக ராஜேஸ்வரி தெரிவிக்கையில், நீதி வென்றுவிட்டது.தணிக்கை குழுவிற்கு மிக்க நன்றி. எனது புகாரை ஏற்று நான் எடுத்து கூறிய சமூகத்திற்கு எதிரான பாடல் வரிகள் நீக்கபட்டது. எமது சமூகப் பணியும் சட்டப் போராட்டங்களும் அடுத்த தலைமுறை நலனுக்காக தொடரும்…. உண்மை பணத்தைவிட வலிமையானது. என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இனி வரும் காலங்களில் விஜய் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், படத்தின் விளம்பரத்திற்காக இது போன்று சமூகத்தை சீரழிக்கும் வரிகளை அவர் வாயிலே பாடுவது, புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என பலரும் விஜய்க்கு அட்வைஸ் செய்து வரும் நிலையில், இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..