இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது, இந்த படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தனி விமானத்தில் நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ், திரிஷா உட்பட படக் குழுவினர் அனைவரும் காஷ்மீர் சென்றவர்கள், அங்கே ஸ்ரீ நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அனைவரும் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்கள்,
இதற்கு முன்பு தமிழ் சினிமா துறையினர் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி நோக்கி படையெடுத்து வந்த காலம் மாறி, தற்பொழுது காஷ்மீரை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருவது போன்று, சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் மற்றும் இன்னும் சில தமிழ் படங்கள் காஷ்மீரில் படமாக்கப்பட்டு வருகிறது.
காஷ்மீர் என்றாலே குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சூடு, தீவிரவாத தாக்குதல் என அச்சத்துடன் வாழும் சூழல் அங்கே வசிக்கும் மக்களுக்கு இருந்த ஒரு காலத்தில், காஷ்மீர் இந்தியாவில் மிக பெரிய சுற்றுலா தலமாக இருந்தாலும் கூட காஷ்மீர் சென்றால் மீண்டும் உயிரோடு திரும்பி வருவோமா என்கின்ற அச்சத்தில் சுற்றுலா செல்வதற்கு கூட அச்சப்பட்டு மக்கள் காஷ்மீர் செல்வதை தவிர்த்து வந்தனர்.
மேலும் சினிமா படத்தில் காஷ்மீர் போன்ற காட்சிகள் படமாக்க படவேண்டும் என்றால், பாதுகாப்பு கருதி ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் காஷ்மீரில் வரும் காட்சிகளை படமாக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்பொழுது காஷ்மீரின் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்தியாவில் பிற மாநிலங்களில் வாழும் மக்களை போன்று தற்போது அந்த மாநில மக்கள் மிகவும் அமைதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி 2019ல் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின்பு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து சட்டப்பிரிவு 370 நீக்கி, மேலும் காஷ்மீரை இரண்டு மாநிலமாக பிரித்து அதில் லடாக் யூனியன் பிரதேசமாக மாற்றி அமைத்த பின்பு, காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு, அமைதியான சூழல் உருவாகியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் காஷ்மீரில் குவிந்து வருகிறார்கள்.
இந்திய சினிமா மட்டுமில்லாமல் ஹோலிவூட் படங்களின் படப்பிடிப்பும் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்புக்கு காஷ்மீர் செல்வதற்கு முன்பு, இயக்குனரிடம் 60 நாள் படப்பிடிப்பு என்று சொல்கிறீர்கள், காஷ்மீரில் ஒன்றும் பிரச்சனை இருக்காதே என விஜய் கேட்க, அதற்கு லோகேஷ் கனகராஜ் நீங்க வந்து அங்கே பாருங்க, நான் லொகேஷன் தேர்வு செய்ய சென்ற போதும் உங்களுக்கு இருந்த அதே சந்தேகத்துடன் தான் சென்றேன்,
10 நாள் காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்திவிட்டு, பிறகு ஷிம்லாவில் எடுத்து மேட்ச் செய்து கொள்ளலாம் என்கிற திட்டத்துடன் லொகேஷன் தேர்வு செய்ய காஷ்மீர் சென்றேன் என தெரிவித்த லோகேஷ் கனகராஜ், ஆனால் அங்கே சென்று, அங்கே நிலவிய அமைதியான சூழலை பார்த்துவிட்டு தான் காஷ்மீர் தொடர்பான அணைத்து காட்சிகளை அங்கேயே எடுத்து விட வேண்டும் என 60 நாட்களும் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டேன் என விஜய்யிடம் காஷ்மீர் செல்வதற்கு முன்பு தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில் தற்பொழுது சுமார் 10 நாட்களுக்கும் மேல் லியோ படத்தின் படப்பிடிப்பில் காஷ்மீரில் இருந்து வரும் நடிகர் விஜய், அங்கே வாழும் மக்கள் மத்தியில் நிலவி வரும் அமைதியான சூழலை பார்த்து, உண்மையிலே பிரதமர் மோடி கிரேட் மேன் தான் என படப்பிடிப்பில் சக நடிகர்களிடம் தெரிவித்து, காஷ்மீர் அமைதிக்கு மோடியின் செய்லபாடுகள் குறித்து வெகுவாக பாராட்டி வருகிறாராம் விஜய்.