பிரபல தயாரிப்பாளர் கொடுத்த மிரட்டல் எச்சரிக்கை.. அரசியலில் அந்தர் பல்டி அடித்த விஜய்..

0
Follow on Google News

சமீப காலமாகவே நடிகர் விஜய்யின் நடவடிக்கைகள், அவருடைய அரசியல் வருகையை உறுதி செய்து வந்த நிலையில், விஜய் அரசியலுக்கு வருவாரா.? இல்லையா.? என்கிற விவாதம் அனல் பறந்து கொண்டிருந்தது, நடிகர் ரஜினிகாந்த் போன்று அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என விஜய் நடிக்கும் படத்தை விளம்பரம் செய்து விட்டு, இறுதியில், அரசியலுக்கு வராமல் ரசிகர்களுக்கு விஜய் ஆல்வா கொடுத்து விடுவார் என ஒரு பக்கம் விமர்சனம் செய்து வந்த நிலையில்,

விஜய் ரசிகர்களே, தளபதி கட்சி தொடங்குவார் என்று தெரியும், ஆனால், இவ்வளவு சீக்கிரம் தொடங்குவர் என்று தெரியாது, என ரசிகர்களுக்கே இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தமிழக வெற்றி கழகம் என தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அதிரடியாக அறிவித்து, தன்னுடைய அரசியல் என்ட்ரியை உறுதி செய்த விஜய், சினிமா – அரசியல் என ஒரே நேரத்தில் இரண்டு குதிரையில் ஓட தனக்கு விருப்பம் இல்லை.

அரசியல் என்கிற ஒரே குதிரையில் ஓடுவதற்காக சினிமாவில் இருந்து முழுவதும் விலகுவதாக அதிரடியாக தெரிவித்து தன்னுடைய அரசியல் ஆட்டத்தை தொடங்கிவிட்டார். இந்நிலையில் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவருடைய மக்கள் இயக்கம் சார்பில் நடந்த மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில், மாணவர்கள் மத்தியில் பேசுகையில் நிறைய படிங்க. அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிங்க என பேசி இருந்தார்.

விஜய்யின் இந்த பேச்சுக்கு பிரபல சினிமா தயாரிப்பாளர் சௌத்ரி தேவர் விஜய்க்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். அதாவது அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை குறிப்பிட்டு பேசிய விஜய், ஏன், பசும்பொன் முத்துராமலிங்க தேவரை குறிப்பிட்டு விஜய் மாணவர்கள் மத்தியில் பேசவில்லை, தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தவிர்த்து விட்டு ஒருவர் அரசியல் செய்தால் எங்கள் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அந்த வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை உச்சரிக்காமல் விஜய் அரசியலுக்குள் வந்தால் அது மிகப் பெரிய வீழ்ச்சியை சந்திக்கும், எங்களுடைய மக்களும் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் தான். அப்படி இருக்கும்போது எப்படி விஜயை தலைவராக ஏற்றுக் கொள்வார்கள் என சௌத்ரி தேவர் மிக கடுமையாக விஜயை எச்சரித்து இருந்தார் சௌத்ரி தேவர்.

இந்நிலையில் அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரை மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், புதிய கட்சி தொடங்கிய அவருடைய கட்சி பேனரில் எந்த ஒரு தலைவரின் புகைப்படமும் இடம்பெறவில்லை, ஒரு தலைவரின் பெயரை குறிப்பிட்டு பேசி, ஒரு தலைவர் பெயரை குறிப்பிட்டு பேசவில்லை என்றால் தனக்கு எதிராக கடும் எதிர்ப்பு வருவதை உணர்ந்த விஜய், தன்னுடைய அரசியல் கட்சி பேனரில் எந்த ஒரு தலைவரின் புகைப்படமும் இடம் பெற வேண்டாம் என உணர்த்தியதாகவும்,

அதனால் தான் விஜய் அறிவித்துள்ள தமிழக வெற்றி கழகம் கட்சி பேனர், மற்றும் விஜயின் லெட்டர் பேடில் கூட எந்த ஒரு தலைவர் புகைப்படமும் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது, அந்த வகையில் அம்பேத்கர், பெரியார், காமராஜர் பெயரை மாணவர் மத்தியில் பேசி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை குறிப்பிடாமல் தவிர்த்து விட்டார் விஜய், என பிரபல தயாரிப்பாளர் சௌத்ரி தேவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்,

தென்மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு விஜய்க்கு எதிராக திரும்பும் ஒரு சூழலை உருவாக்கும் வகையில் சவுத்ரி தேவர் விஜய் எதிராக செயல்பட்டு, விஜய் அரசியலுக்கு வெட்டு வைக்கும் வகையில், விஜய்க்கு பயத்தை காட்டி அந்த பல்டி அடிக்க வைத்துள்ளார் என்று சொல்லும் அளவுக்கு விஜய் அவருடைய அரசியல் அறிவிப்பில் நமக்கெதுக்கு வம்பு, இனிமேல் கவனமாக இருப்போம் என எந்த ஒரு தலைவர் புகைப்படம் இல்லாமல் அமைத்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.