விஜய் அரசியல் ரிப்போர்ட்… மிக பெரிய கலக்கத்தில் தேசிய கட்சிகளும் திராவிட கட்சிகளும்.

0
Follow on Google News

பொதுவாக புதிய கட்சிகளை தொடங்கி அரசியலுக்கு வர நினைக்கும் பலரும் ஒன்று நாடாளுமன்றத்தை குறி வைப்பார்கள், அல்லது சட்டமன்றத்தை குறி வைப்பார்கள், ஆரம்பத்திலேயே மிகப்பெரிய அரசியலுக்கு வருகின்றவர் இலக்கு என்பது நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றமாகத் தான் இருக்கும். ஆனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே அடிப்படையில் இருந்து தன்னுடைய கட்டமைப்பை உருவாக்கி வருகிறார்.

அந்த வகையில் நடந்து முடிந்த உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் களத்தில் இறங்கி போட்டி போட வைத்து வெற்றியும் பெறவும் வைத்துள்ளார் விஜய். விஜயின் அரசியல் பிரவேசம் என்பது திமுக மற்றும் அதிமுகவுக்கான சவாலாக தான் பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு பல துண்டுகளாக உடைந்து அண்ணா திமுக மிகப்பெரிய சரிதை சந்தித்து அழிவின் விளிம்பில் உள்ளது.

மீண்டும் அண்ணா திமுக இழந்த இடத்தை மீட்டெடுக்குமா என்றால் அதற்கான வாய்ப்பே இல்லை, இதற்கு முக்கிய காரணம் அண்ணா திமுகவை வழிநடத்த சரியான தலைமை யாருமில்லை. இந்த நிலையில் திமுக கூட்டணிக் கட்சிகள் துணையில்லாமல் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா.? என்றால் அதற்கான வாய்ப்பு இல்லை என்பது கடந்த கால தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளது.

அதே போன்று புதிதாக கட்சி தொடங்கி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலை சந்தித்த நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி பெருமளவு செயல் பாட்டில் தற்பொழுது, இல்லை தேமுதிக விஜயகாந்தின் தேமுதிக, இன்னும் பல கட்சிகள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னால் ஒரு கூட்டம் இருந்தாலும் கூட, அவர் அரசியலுக்கு பொருந்தாத சில விஷயங்களை வெளிப்படுத்துவதால் அவருக்கான ஒட்டு வாங்கி என்பது வெற்றி பெற்று தராது.

இதெல்லாம் விஜய்க்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு. விஜய் அரசியல் என்ட்ரி என்பது தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு ஒரு மாற்று கட்சியாக அவர் தொடங்கயிருக்கும் கட்சி உருவடுக்கும் என்றும், மேலும் இளைஞர்களின் வாக்குகளை வெகுவாக விஜய் கவர்ந்து விடுவார் அந்த வகையில் தற்போது ஆளும் திமுக இளைஞர்கள் வாக்கு பெருமளவு இழக்கவும் நேரிடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அதே போன்று விஜயின் அரசியல் என்ட்ரி என்பது திராவிட கட்சிகளுக்கு மட்டுமல்ல, பாஜகவின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பார். அந்த வகையில் புதிய வாக்காளர்களை கவரும் சக்தியாக விஜய் உருவெடுப்பார், இதனால் புதிய வாக்காளர்களை கவரும் வகையில் செயல்பட்டு வரும் பாஜகவிற்கு வளர்ச்சிக்கும் தடையாக இருப்பார், அதே நேரத்தில் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளின் வாக்குகளையும் பெருமளவு விஜய் கைப்பற்றுவார் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

இந்நிலையில் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு பிரதான கட்சியாக வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் அரசியல் நிச்சயம் இருக்கும் என தெரிவிக்கும் அரசியல் பார்வையாளர்கள், விஜய் அரசியல் என்ட்ரி என்பது திமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், மேலும் விஜய்யின் அடுத்தடுத்து அவரின் அரசியல் நகர்வுகள் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு மிக பெரிய இடியாக அமையும் என எதிர்பார்க்க படுகிறது.