பொதுவாக புதிய கட்சிகளை தொடங்கி அரசியலுக்கு வர நினைக்கும் பலரும் ஒன்று நாடாளுமன்றத்தை குறி வைப்பார்கள், அல்லது சட்டமன்றத்தை குறி வைப்பார்கள், ஆனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே அடிப்படையில் இருந்து தன்னுடைய கட்டமைப்பை உருவாக்கி வந்தவர். அந்த வகையில் நடந்து முடிந்த உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் களத்தில் இறங்கி போட்டி போட வைத்து வெற்றி பெறவும் வைத்தவர் விஜய்.
இதற்கு முன்பு விஜய் பல காலகட்டத்தில் அரசியலில் என்ட்ரி கொடுக்க முன்னெடுப்புகளை மேற்கொண்ட போது, அந்ததந்த காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்தவர்களால், விஜய் தட்டி உட்கார வைக்கப்பட்டார், அதில் ஒரு சம்பவம் தான் தலைவா படத்தின் போது விஜய் கை கட்டி ஜெயலலிதாவிடம் கெஞ்சி வீடியோ வெளியிட்ட சம்பவம். இந்நிலையில் இதற்கு முன்பு விஜய்க்கு எதிராக அரசியல் ரீதியாக வந்த பிரச்சனைகளை துணிந்து எதிர்கொள்ள முடியாத விஜய், தற்பொழுது எதையும் சந்தித்து விடுவோம் என அரசியலில் இறங்க துணித்துவிட்டார்.
தேர்தலின் அரசியல் வியூக வகுப்பாளராக பிரபலமாக அறியப்பட்டவர் பிரசாந்த் கிஷோரை கடந்த காலங்களில் சுமார் மூன்று முறை ரகசியமாக சந்தித்த விஜய், அவருடைய ஆலோசனை படியே, விஜய் மாணவர் சந்திப்பு, தளபதி விஜய் பயிலகம் என செயல்பாடு பின்னனியில் இருந்து வியூகங்களை வகுத்து கொடுப்பது பிரசாந்த் கிஷோர் என கூறப்படுகிறது, மேலும் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வியூகம் வகுத்து கொடுத்து முதல்வராக்கியது போது விஜய்க்கு வாய்ப்பு இருக்கிறது என பிரசாந்து கிஷோர் விஜய்க்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சினிமாவில் எம்ஜிஆர் – ஜெயலலிதா இருவரும் ஜோடியாக நடித்த படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா இருக்கு என்கிற பாராட்டை பெற்றது போன்று, விஜய் – திரிஷா ஜோடி நடிக்கும் படத்திற்கு பாராட்டை பெற்று, விஜய் – திரிஷா ஜோடி ஒரு காலக்கட்டத்தில் வெற்றி ஜோடி என தொடர்ந்து ஜோடியாக நடித்து வந்தனர். இந்நிலையில் சில காலம் சினிமாவில் மார்க்கெட் இழந்து திரிஷா வீட்டிலே முடங்கினார்.
நீண்ட இடைவெளிக்கு பின்பு பொன்னியின் செல்வன் படத்தில் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்த திரிஷாவுக்கு லியோ படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்று கொடுத்து திரிஷா சினிமா ரீ – என்ட்ரிக்கு பக்க பலமாக இருந்தார். மேலும் நார்வே நாட்டில் திரிஷா – விஜய் இருவரும் ஜோடியாக சுற்றி திரிந்த புகைப்படம் கூட வெளியானது. அந்த அளவுக்கு விஜய் – திரிஷா இருவரும் மிக நெருக்கமாக இருந்து வருகின்றவர்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் என புதிய கட்சியை தொடங்கியுள்ள விஜய். எம்ஜிஆர் அரசியல் வளர்ச்சிக்கு எப்படி ஜெயலலிதா உறுதுணையாக இருந்தாரோ, அதே போன்று தனக்கு நடிகை திரிஷா நிச்சயம் இருப்பார் என திட்டமிட்ட நடிகர் விஜய். ஜெயலலிதாவை கொள்கை பரப்பு செயலாளராக நியமித்து தமிழகம் முழவதும் தனக்காக பிரச்சாரம் செய்ய வைத்த எம்ஜிஆர் போன்று, திரிஷாவை அரசியலில் களம் இறக்க முடிவு செய்துள்ளார் விஜய்.
மேலும் திரிஷாவும் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஜெயலலிதா போன்று முழு நேர அரசியவாதிகயாக மாறுவதாக நடிகர் விஜய்யிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது, அந்த வகையில் 2026 சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் விஜய்யின் தமிழக வெற்றி கட்சியில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்ய இருக்கும் திர்ஷாவை எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக்கி டெல்லி அரசியலில் களம் இறக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.