ஜோதிகா, சங்கீதா விஜய் இருவரையும் பச்சையாக பேசி வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்.! விஜய் பணம் கொடுத்து ஆபாசமாக பேச விடுவதாக குற்றச்சாட்டு.!

0
Follow on Google News

2015ஆம் ஆண்டு அழகி போட்டியில் கலந்து கொண்டு மிஸ் மெட்ராஸ் பட்டத்தை பெற்றவர் மீரா மிதுன், அதன் பின்பு மாடலிங் துறையில் நுழைந்தவர், விஜய் தொலைக்காட்சியில் நடத்த ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று சில சர்ச்சையில் சிக்கினார், அதனை தொடர்ந்து தமிழில் வெளியான சில படங்களில் நடித்தார் மீரா மிதுன், விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளர் இயக்குனர் சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார், இந்த சம்பவத்துக்கு பிறகு தான் மீரா மிதுன் பிரபலமாக தொடங்கினர். இதன் பின்பு பல்வேறு சர்ச்சையில் சிக்கிய மீரா மிதுன் , நடிகர் விஜய் மனைவி சங்கீதா மற்றும் நடிகர் சூர்யா மனைவி ஜோதிகா ஆகியோரை மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நடிகை மீரா மீதுணை அவரது ரசிகர்கள் கடுமையாக பதிலடி கொடுத்ததை தொடர்ந்து, இந்த விடியோவை மீராமீதுன் வெளியிட்டுள்ளார், அதில் அவர் பேசியிருப்பதாவது,என்னுடைய சாதனைகள், மற்றும் என்னுடைய அடுத்த படம் குறித்து டிவீட்டரில் பதிவு செய்தால் கமெண்டில் வந்து விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் ஆபாசமாக என்னை திட்டுகிறார்கள்.

இதே போன்று (ஆபாச வார்த்தையை உச்சரித்து) விஜய் மனைவி சங்கீதா மற்றும் சூர்யா மனைவி ஜோதிகாவை இதே போன்று ஆபாசமாக திட்டினால் ஏற்று கொள்வீர்களா என கேட்ட மீரா மிதுன், மேலும் விஜய் மனைவி சங்கீதா லண்டனில் யார்.? யாருடன் தொடர்பில் இருந்தார் என்கிற தகவலை வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார், இதே போன்று விஜய் மாற்று சூர்யா ரசிகர்கள் தொடர்ந்து என்னுடைய டிவீட்டர் பக்கத்தில் வந்து ஆபாசமாக திட்டி கமெண்ட் செய்தால்.

அடுத்ததாக நான் டிவீட்டரில் போடும் ஒவ்வொரு பதிவிலும் விஜய் மனைவி சங்கீதா மற்றும் சூர்யா மனைவி ஜோதிகாவை பச்சையாக திட்டி பதிவு செய்வேன் என தெரிவித்துள்ள மீரா மிதுன். விஜய் மற்றும் சூர்யா என்னை ஆட்களை வைத்து திட்டுவதை விட்டுவிட்டு என்னுடைய சாதனைகளை முறியடிக்க ஏதாவது செய்யுள்கள்,இதற்கு பிறகு என்னை ஆட்களை வைத்து திட்டவிட்டு பொட்டை தானமாக வீட்டுக்குள் ஒழிந்து கொள்ள முடியாது என நடிகை மீரா மிதுன் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடதக்கது. அந்த வீடியோ கீழே இனைக்கப்பட்டுள்ளது.