உசுப்பேத்துரவன் கிட்ட உம்முனும் கடுப்பேத்துரவன் கிட்ட கம்முனும் இருந்தா நம்ம வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என்று விஜய் மேடைகளில் பேசியது போன்று, தன்னுடைய ரசிகர்களை உசுப்பேத்தி விட்டு அவர்கள் பாவம் போலீசாரிடம் தடியடி வாங்குவதும், ஆனால் ரசிகர்கள் அடுத்து இதுபோன்று தடியடியில் சிக்காமல் இருக்க விஜய் அறிவுரை கூறுவார், அல்லது அடிவாங்கிய ரசிகர்களுக்காக குரல் கொடுப்பாரா என எதிர்பார்த்தால்.
ரசிகர்கள் போலீசாரிடம் தடியடி வாங்குவதை கண்டுகொள்ளாமல் கம்முனு இருந்து, சும்மா ஜம்முனு அடுத்த பட ஷூட்டிங்ல் பிசியாகி விடுவார். இப்படி ஒவ்வொரு முறையும் விஜய் ரசிகர்கள் போலீசாரிடம் தடியடி வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். ஆனால் இதுவரை தடியடி மட்டுமே வாங்கி வந்த விஜய் ரசிகர்கள் தற்பொழுது சிறையில் கம்பி என்னும் அளவுக்கு சம்பவம் செய்துள்ளார்கள்.
பிகில் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் அதிக அளவில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் விற்பனை செய்ததால் அதிக அளவில் ரசிகர்கள் திரண்டதாகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் விஜய் ரசிகர்கள் மீது நடத்திய தடியடியில் ஒவ்வொரு ரசிகரும் தெறித்து ஓடினார்கள். இதே போன்று வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு விஜய் ரசிகர்கள் முண்டியடித்து செல்ல முயன்றதால் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதனை தொடர்ந்து சென்னை ரோகினி திரையரங்கில் முதல் நாள் முதல் ஷோ பார்க்க சென்ற விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையில் நடந்த சலசலப்பில் போலீசார் நடத்திய தடியடியில் அதிகம் பாதிக்கப்பட்டது விஜய் ரசிகர்கள் தான். இப்படி ஒவ்வொரு முறையும் அதிக டிக்கெட் எடுத்து விஜயை திரையிலும், ஆடியோ வெளியிட்டு விழாவில் நேரிலும் சென்று பார்க்க விஜய் ரசிகர்களுக்கு தடியடி தான் மிச்சம்.
இப்படி ஒவ்வொரு முறையும் விஜய் ரசிகர்கள் போலீசாரிடம் அடி வாங்குவதர்க்கு முக்கிய காரணம் விஜய் ரசிகர்கள் கட்டுப்பாடின்றி நடந்து கொள்வது தான் என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் இம்முறை லியோ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடைபெறாத காரணத்தினால் போலீசார் தடியடியில் இருந்து தப்பித்துவிட்டார்கள் விஜய் ரசிகர்கள் என்றே பலரும் கிண்டல் செய்து வருவதை பார்க்க முடிகிறது.
ஆனால் தற்பொழுது மிக பெரிய சிக்கலில் விஜய் ரசிகர்கள் சிக்கியுள்ளார்கள். லியோ படத்தின் ட்ரைலர் வெளியிட பட்ட சென்னை ரோகினி திரையரங்கில் விஜய் ரசிகர்கள் இருக்கைகளை சேதப்படுத்தி நாசம் செய்துவிட்டார்கள். இந்நிலையில் சேதம் அடைந்த இருக்கைகளுக்கு இன்சூரன்ஸ் கிளைம் செய்யவேண்டும் என்றால், இருக்கைகள் சேதம் செய்தவர்கள் மீது புகார் தெரிவிக்க வேண்டும்.
அப்படி புகார் தெரிவித்தால், இருக்கையை சேதப்படுத்திய விஜய் ரசிகர்களை தட்டி தூக்கி காவல் துறை லாடம் கட்டிவிடும், அந்த வகையில் தன்னுடைய ரசிகர்களை காப்பாற்ற நடிகர் விஜய்யே நேரடியாக இறங்கி டீல் பேசியதாக தகவல் வெளியாகி உளது. தயவு செய்து போலீஸ் புகார் மட்டும் கொடுக்க வேண்டாம், என்னுடைய ரசிகர்கள் பலர் மாணவர்கள் போலீஸ் கேஸ் அது இதுனா அவர்கள் படிப்பு பாதிக்கப்படும்என விஜய் தரப்பில் இருந்து பேசப்பட்டு.
அதாவது ரோகினி திரையரங்கில் சேதம் அடைந்த இருக்கைகளை சரி செய்ய விஜய் தரப்பில் இருந்து பணம் திரையரங்கு உரிமையாளருக்கு கைமாறியதாக கூறப்படுகிறது.இதன் பின்பே இருக்கைகள் சூறையாடப்பட்ட திரையரங்கம் இதற்கு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கவில்லை , இன்சூரன்ஸ் கூட கிளைம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இருந்தும் விஜய் அவருடைய ரசிகர்கள் செய்யும் தவறுகளுக்காக இப்படி பேரம் பேசி சரி செய்வதை விட, தன்னுடைய ரசிகர்கள் எப்படி கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினால் போலீசாருக்கும் தடியடி நடத்தும் அவசியம் இருக்காது என்பது குறிப்பிடதக்கது.