இந்த விஷயம் மட்டும் வெளியே லீக் ஆச்சு மொத்தமும் போச்சு… சத்தமே இல்லாமல் விஜய் செய்த வேலை..

0
Follow on Google News

நடிகர் விஜய் லியோ படத்தை முடித்த கையோடு அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட லியோ படம் எதிர்வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தளபதி 68 படத்தின் பூஜை முன்கூட்டியே சத்தமின்றி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அடுத்ததாக, விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதுமட்டுமல்லாமல், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் ஏராளமான சினிமா பிரபலங்கள் நடிகர் விஜயுடன் நடிக்கவிருப்பதாகவும், தளபதி 68 படத்தில் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத நடிகர் ஒருவர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தளபதி ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் யார் அந்த நடிகர் என்ற ஆர்வத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ள லியோ படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.லியோ படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

ஒருபக்கம் KGF படத்தின் வில்லன் சஞ்சய் தத் மற்றும் நடிகர் அர்ஜூன் ஆகியோர் நடித்துள்ளனர் என்பதாலும், மற்றொரு பக்கம் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்குப் பிறகு திரிஷா-விஜய் கூட்டணி இணையப்போகிறது என்பதாலுமே ரசிகர்கள் லியோ படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறலாம். அதேசமயம், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தில் ஏராளமான பிரபலங்களை களமிறக்கியுள்ளார்.

அவர்களில் நடிகை பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ், ஜோஜூ ஜார்ஜ், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், ஜவஹர் உள்ளிட்ட பிரபலங்களும் அடங்குவர். இவ்வாறு நட்சத்திரப் பட்டாளங்கள் நிறைந்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருந்தது. ஆடியோ லாஞ்சில் நடிகர் விஜய் என்ன பேசப் போகிறார் என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

இவ்வாறு படத்தின் ஆடியோ லாஞ் விழாவிற்கான எதிர்பார்ப்பு வலுத்து வந்த நிலையில், திடீரென ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே, AR ரகுமான் கான்செர்ட்டில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பான வழக்கு முடிவுக்கு வராததால், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கும் அனுமதி அளிக்கப் போவதில்லை என்று அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் பேராவலுடன் காத்திருந்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஆடியோ லாஞ் இல்லைனா என்ன..உங்களை குஷிபடுத்துவதற்காகவே லியோ படத்தின் இரண்டாவது பாடலை வெளியிடுகிறோம் என்று படக்குழு ‘badass’ என்ற பாடலை வெளியிட்டு மாஸ் காட்டியது. இவ்வாறு லியோ படம் அடுத்தடுத்து சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், விஜயின் அடுத்த படத்திற்கான பூஜையை கப்சிப்பென்று போட்டு முடித்துவிட்டார் இயக்குனர் வெங்கட் பிரபு. பூஜையைத் தொடர்ந்து தளபதி 68 குறித்த ஒரு சில அப்டேட்களும் வெளியாகியுள்ளது.

ஆம், AGS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரபுதேவா, ஜெய், அபர்ணா தாஸ், வைபவ், லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் பூஜையில், பிரபுதேவா லைலா, மீனாட்சி சௌத்ரி, சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, எண்பதுகளில் பிஸியாக வலம் வந்த நடிகரான மைக் மோகன் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார் என்பது விஜய் ரசிகர்களளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆம், பல வருடங்களுக்குப் பிறகு தளபதி விஜய் படத்தில் நடிக்கிறார் என்றால் படம் கொஞ்சம் ஸ்பெஷல் தான…