நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது இந்தப் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். பெரும் பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படத்தின் டைட்டில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படங்கள் அனைத்துமே தொடர் வெற்றியை பெற்று வருகிறது.
இதனால் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் உள்ளது. அந்த வகையில் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் ஒவ்வொரு காட்சிகளையும் பிரமிக்கும் வகையில் எடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். மேலும் படப்பிடிப்பில் நடக்கும் அனைத்து தகவல்களையும் ரகசியமாக காத்து வருகிறது பட குழுவினர்.
அந்த வகையில் நடிகர் விஜய் தவிர்த்து அந்த படத்தில் நடிக்கும் பிறர் யாருக்கும் அந்த படத்தின் முழு கதை தெரியாது என கூறப்படுகிறது.அவரவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் மட்டுமே அவர்களுக்கு தெரியும் . மேலும் என்ன காட்சி அடித்து எடுக்கப்பட இருக்கிறது என்பது படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பின்பு தான் அவர்களுக்கு தெரிய வருகிறது.
இந்த நிலையில் லியோ படம் குறித்த ஒரு புதிய தகவல் ஓன்று கசிந்துள்ளது. சென்னையில் லியோ படத்தின் படப்பிடிப்பு நடந்த போது ஒரு காபி ஷாப் செட் அமைக்கப்பட்டது போன்று காஷ்மீரிலும் அமைக்கப்பட்டு படமாக்கப்பட வருவதாக தகவல் வெளியாகிறது. இந்த நிலையில் ஏற்கனவே வெளியான ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் என்கின்ற ஒரு படத்தின் காப்பி தான் விஜய் நடிக்கும் லியோ படத்தின் கதை என்கின்ற ஒரு தகவல் வைரலாகி வரும் நிலையில்.
அமேசான் பிரைமில் இருந்த ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் படத்தை தற்பொழுது அந்நிறுவனம் இந்தியாவில் இருப்பவர் மட்டும் பார்க்க முடியாத அளவு நீக்கி உள்ளது. மேலும் ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் படத்தின் காப்பிரைட்ஸை லியோ பட குழுவினர் வாங்கியதால் தான் அந்த படம் அமேசான் பிரைமில் இந்தியாவில் இருப்பவர்கள் பார்க்க முடியாத அளவுக்கு நீக்கப்பட்டுள்ளதா என்கின்ற சந்தேகமும் மேலும் வலுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.