நடிகர் விஜயின் சினிமா ஆசையை நிறைவேற்றுவதற்காக அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் நடிகர் விஜய் வைத்து நாளைய தீர்ப்பு என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைக்கிறார். முதல் படமே படுதோல்வி. விஜயை ஒரு ஹீரோவாக கொண்டு வருவதற்கு நடிகர் விஜயின் தந்தை தொடர்ந்து விஜயை வைத்து படம் இயக்கினார், இதில் சில படங்கள் சொந்தமாகவே தயாரித்தார். விஜய் தந்தை இயக்கத்தில் விஜய் நடித்த அனைத்து படங்களும் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது.
இதனால் விஜய் தந்தைக்கு சுமார் 40 லட்ச ரூபாய் கடன் காரணமாக, அவருடைய வீட்டை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படி ஒரு சூழலில் தான் நடிகர் விஜயகாந்தை அணுகி தன்னுடைய மகன் உடன் இணைந்து விஜயகாந்த் நடிக்க வேண்டும், அப்போதுதான் விஜய் முதலில் ஒரு நடிகராக மக்கள் மத்தியில் அறியப்படுவார் என, அப்போது கேப்டன் பிரபாகரன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து உச்சத்தில் இருந்த நடிகர் விஜயகாந்தை அணுகினார் எஸ் ஏ சந்திரசேகர்.
சற்றும் யோசிக்காமல் உடனே செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து கொடுத்தார் விஜயகாந்த். இந்த படத்திற்கு பின்பு விஜய் என்கின்ற ஒரு நடிகர் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இதன் பின்பு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று ஒரு முன்னணி நடிகராக வந்தார் விஜய். அந்த வகையில் விஜய்க்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்தது மட்டுமின்றி விஜய் குடும்பத்தினர் கடலில் தத்தளித்த போது, அவர்களை செந்தூரப்பாண்டி படம் மூலம் காப்பாற்றி கரை சேர்த்தவர் விஜயகாந்த்.
இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது விஜய் எட்டி கூட பார்க்கவில்லை, நன்றி இல்லாத மனிதர் விஜய்காந்த் என கடும் விமர்சனம் எழுந்த நிலையில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்க்கு எதிராக, உயிரோடு கேப்டன் இருக்கும் போது எட்டி கூட பார்க்காத விஜய் இப்ப எதுக்கு வருகிறார் என எதிர்ப்பு குரலும் எழுந்தது, அதே நேரத்தில் கடந்த ஒரு வருடமாக விஜயகாந்தை பார்க்க விஜய் முயற்சி செய்ததாகவும் ஆனால், விஜயகாந்த் குடும்பத்தினர் அனுமதி தரவில்லை என்கிற செய்தியும் வெளியாகி வருகிறது.
விஜயகாந்த குடும்பத்தினருக்கு விஜயை ஏன் கேப்ப்டனை பார்க்க அனுமதிக்கவில்லை என்கிற சில தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான சகாப்தம் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு நடிகர் விஜயகாந்த், நேரடியாக விஜய் மற்றும் விஜய் தந்தை SA சந்திரசேகர் இருவருக்கும் தொலைபேசியில் அழைத்துள்ளார், இருவருமே தொலைபேசியை எடுக்கவில்லை.
மீண்டும் விஜயகாந்த் விஜய்யை தொடர்ந்து தொலைபேசியில் அழைத்த போது,,விஜய் ஒரு கட்டத்தில் தொலைபேசியை எடுத்து பேசியுள்ளார், அப்போது விஜயகாந்த், உங்களுக்கும் தொலைபேசியில் அழைத்தேன், உங்க அப்பாவுக்கு அழைத்தேன் இருவரும் எடுக்க வில்லை, என் மகன் சண்முக பாண்டியன் நடித்த சகாப்தம் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு நீங்கள் வரவேண்டும் என தெரிவித்த விஜயகாந்த்.
மேலும் விழா அழைப்பிதழில் விஜய் மற்றும் விஜய் தந்தையின் புகைப்படத்தையும் அச்சிட்டு இருந்துள்ளார். ஆனால் விஜயகாந்த் அவரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தும் விஜய் வரவில்லை என கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து கேப்டன் நல்ல உடல்நலத்துடன் இருந்த போதே அவர் செய்த உதவியை மறந்து உதாசீன படுத்தி வந்த விஜய் மீது விஜயகாந்த் குடும்பத்தினருக்கு இருந்த கோபம் கூட விஜயை விஜயகாந்தை பார்க்க அனுமதி கொடுக்காமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.