கடந்த 2019ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டம், பல்வேறு போராட்டங்கள் காரணமாக உடனே அமல்படுத்தாமல் இருந்து வந்த நிலையில். தற்பொழுது குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் லெட்டர் பேட்டில் தான் புதியதாக கட்சி தொடங்கியுள்ளேன் என தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்து விட்டு சினிமாவில் பிசியாக இருந்து வரும். அவர் அரசியல் கட்சி தொடங்கிய பின்பு பல பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்த நிலையில், ஒரு அரசியல் கட்சி தலைவராக கருத்து தெரிவிக்காமல், படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை கூட்டமாக சேர்த்து, விஜய் வேன் மீது நின்று செல்பி எடுத்து விளையாடி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நாட்டையே உலுக்கிய மிக பெரிய போதை பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக மூச்சு கூட விடாத விஜய், நாட்டில் நடக்கும் குற்றச்செயலுக்கு எதிராக வாய் திறந்து கண்டனம் தெரிவிக்கவில்லை என்றாலும் கூட, லெட்டர் பேட்டில் கட்சி தொடங்கிய விஜய், அவருடைய லெட்டர் பேட்டில் கூட ஒரு நாலு வரி கண்டனம் தெரிவிக்க கூடாதா என விஜய்க்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்து வந்தது.
இதனை தொடர்ந்து நாலு வரியில் குடியுரிமை சட்டம் அமல்படுத்தியது தொடர்பாக அறிக்கை ஒன்றை அவருடைய லெட்டர் பேட்டில் வெளியுட்டுள்ளார் விஜய். அதில் சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.
தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்” என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் விஜய் வெளியிட்டுள்ள இந்த நாலு வரி அறிக்கையில் அவர் தமிழகத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளது. இந்திய குடியுரிமை துறை என்பது மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளதா.? மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா.? என்கிற அடிப்படை அறிவு கூடவா விஜய்க்கு கிடையாது என பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
அதவாது குடியுரிமை துறை என்பது மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது, அப்படி இருக்கையில் தமிழகத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளது, முதலில் குடியுரிமை சட்டம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டு வந்து அறிக்கை வெளியிட வேண்டும் என பலரும் அட்வைஸ் செய்து வருவதை பார்க்க முடிகிறது.
மேலும் தொடர்ந்து தமிழக்தின் மக்கள் பிரச்சனைக்கு நாலு வரி அறிக்கையாவது வெளியிடலாமே என்று ஒரு பேச்சுக்கு விஜய்யிடம் சொன்னால் அதே நாலு வரியிலே கடமைக்காக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள விஜய், இதில் மத்திய, மாநில அரசு என யாரையும் நேரடியாக கண்டிக்கும் தைரியம் கூட இல்லை, இதில் முதல்வர் கனவில் வேறு மிதந்து வருகிறார் விஜய் என பலரும் கேலி கிண்டல் செய்து வருவதை பார்க்க முடிகிறது.