தப்பிக்கவே முடியாது… சுற்றி சுற்றி விஜய்க்கு இருக்கும் பிரச்சனை… லியோ படத்தின் வசூலுக்கு விழுந்த ஆப்பு..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக ஓயாத போராட்டமாக போய்க்கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் பட்டம் தான். அதிலும் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ரிலீஸ் ஆன பிறகு இது எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போல் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பல சினிமா பிரபலங்களும் யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் அவர்கள் பங்குக்கு ரசிகர்களை ஏத்தி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வாரிசு ஆடியோ வெளியிட்டுவிழாவில் சரத்குமார் பேசிய சூப்பர் ஸ்டார் சர்ச்சையில் தொடங்கிய ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதல் ஜெயிலர் படம் ஆடியோ வெளியிட்டு விழாவில் ரஜினி பேசியதற்கு பின்பு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. தற்போது விஜய் – ரஜினி ரசிகர்கள் சண்டை ஆனது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. யார் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்ற போட்டி தான் அடுத்த கட்டமே.

திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் படம் வசூல் ஏற்கனவே நானூறு கோடியை மிஞ்சி விட்டது. தற்போது இந்த படத்தின் வசூலை முறியடிப்பது தான் விஜயின் ஒரே நோக்கம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் லியோ படத்தின் ப்ரோமோஷனை அந்த டீம் வேற லெவலில் செய்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள லியோ படத்திற்காக விஜய் 125 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

7 ஸ்கிரீன் நிறுவனத்தின் லலித் குமார் இப்படத்தைத் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படமானது மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஆயுத பூஜை, விஜய தசமி விடுமுறை நாட்கள் என்பதால் படத்திற்கு நல்ல வசூல் வரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதே விடுமுறை நாட்களை குறிவைத்து தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா நடித்திருக்கும் ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகிறது. அனில் ரவிபுடி இயக்கியிருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பாலகிருஷ்ணாவின் வழக்கமான அதிரடி ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி 20ம் தேதி ரவி தேஜாவின் டைகர் நாகேஷ்வர ராவ் படம் ரிலீஸ் ஆகிறது. காயத்ரி பரத்வாஜ், நூபுர் சனோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வம்சி இயக்கும் இப்படத்திற்கு ஆர்.மதி ஒளிப்பதிவு செய்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படம் ரவி தேஜாவின் கரியரிலேயே அதிக பட்ஜெட் கொண்ட படமாக அமைந்துள்ளது.

ஒரே நோத்தில் பாலகிருஷ்ணா, ரவி தேஜா மற்றும் விஜய்யின் படம் வெளியாவதால், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ‘லியோ’ படத்தின் வசூல் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில் கன்னடத்தில் சிவராஜ்குமாரின் கோஸ்ட் படமும் அக்டோபர் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.

மற்ற மொழிகளில் உள்ள டாப் நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஏற்கனவே ஜெயிலர் படத்தின் மூலம் சிவராஜ் குமார் தமிழ்நாட்டிலும் பல பேன்ஸ்களை உருவாக்கி விட்டார். இந்தப் படம் இந்திய சினிமாவில் ஒரு தனித்துவமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் கர்நாடகாவில் லியோ படத்தின் வசூல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் விஜய்யின் லியோ படத்திற்கு எல்லாம் பக்கமும் ஆப்பு ரெடியாக இருப்பதால் என்ன செய்வது என திகைத்து நிற்கிறது லியோ பட குழு.