இறந்தவர் பணத்தை ஏப்பம் விடும் கெளதம் வாசுதேவ்… கண்ணீர் விட்டு கதறும் பணம் கொடுத்தவர் மனைவி..

0
Follow on Google News

நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பு நடிப்பில் வெளியான படம் சின்னத்தம்பி படத்தின் தயாரிப்பாளர் பாலு கொரோனா தொற்று காரணமாக மறைந்துவிட்டார். இவர் மறைவதற்கு முன்பு நடிகர் விஷால் வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார். அதே போன்று இயக்குனர் கெளதம் மேனனை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார். அப்போது விஷால் தனக்கு பொருளாதார சிக்கல் இருப்பதாக தெரிவித்து படம் தொடங்குவதற்கு முன்பே பணம் கேட்டுள்ளார். படத்தில் நடிக்கும் போது வாங்கிய தொகையை கழித்து கொள்ளலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்காக நடிகர் விஷாலுக்கு ரூபாய் 7 கோடி அட்வான்ஸ் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் பாலு. அதே போன்று இயக்குனர் கவுதம் மேனன் அவருக்கும் பணம் கஷ்டம் இருப்பதாக தெரிவிக்க அவருக்கு ரூபாய் 4 கோடி அட்வான்ஸ் கொடுத்துள்ளார் பாலு. இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக பாலு மரணம் அடைத்தார். இதனை தொடர்ந்து பாலு தயாரிப்பில் ஒரு படம் நடித்து கொடுத்து அவர் குடுப்பத்திற்கு நல்ல லாபத்தை பெற்று தருவேன் என நடிகர் விஷால் மற்றும் கெளதம் மேனன் இருவரும் உறுதியளித்தனர்.

ஆனால் அதற்கான வேலைகளில் இருவரும் தொடங்கவில்லை. இந்நிலையில் மறைந்த தயாரிப்பாளர் பாலு மனைவி தன்னுடைய கணவர் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி தரும்படி இயக்குனர் கவுதம் மேனனிடம் பலமுறை கேட்டும் எந்த ஒரு முறையான பதிலும் வரவில்லை. ஆனால் விரைவில் உங்க தயாரிப்பில் ஒரு படம் செய்து தருவதாக பலமுறை உறுதியளித்து டிமிக்கி கொடுத்து வந்துள்ளார் கெளதம் வாசுதேவ் மேனன்.

பாலு இறந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில், தொடர்ந்து பாலுவிடம் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் டிமிக்கி கொடுத்த வந்த இயக்குனர் கவுதம் வாசுதேவ் மீது மறைந்த தயாரிப்பாளர் பாலு மனைவி தயாரிப்பாளர் சங்கத்தில் மறைந்த என்னுடைய கணவர் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி வரும் இயக்குனர் கவுதம் வாசுதேவிடம் இருந்து மீட்டு தரவேண்டும் என புகார் தெரிவித்துள்ளார் மறைந்த தயாரிப்பாளர் பாலுவின் மனைவி.

இதனைத் தொடர்ந்து பலமுறை தயாரிப்பாளர் சங்கம் மறைந்த இயக்குனர் பாலுவின் பணத்தை அவருடைய மனைவியிடம் திரும்ப தர கௌதம் வாசுதேவ் மேனனிடம் வலியுறுத்தியும் அவர் இதுவரை எந்த ஒரு செட்டில்மெண்டும் செய்யவில்லை. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் பாலுவின் மனைவிக்கு நீதி கிடைக்கும் வகையில் இயக்குனர் கௌதம் வாசுதேவன் மீது ரெட் கார்ட் விதிக்கும் முடிவுக்கு வந்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

இதனை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார், அதில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் கௌதம் வாசுதேவ் மீது தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு விதித்தால், அது தன்னுடைய தயாரிப்பில் வெளியாகும் லியோ படத்திற்கு பெரும் சிக்கலாக அமைந்து விடும் என கருதி, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசி கௌதம் வாசுதேவ் மேனன் பாலுவுக்கு தரவேண்டிய பணத்தில் தன்னுடைய பங்கிற்கு 30 லட்சம் ரூபாய் கொடுக்க முன் வந்த லலித்.

கௌதம் வாசுதேவ் மேனனுக்கு கொடுக்கும் சம்பளத்தில் அதை கழித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று கௌதம் வாசுதேவன் நடிக்கும் பல படங்களின் தயாரிப்பாளர்கள் அவரவர் பங்குக்கு ஒரு தொகையை கொடுத்து அந்த பணத்தை கௌதம் வாசுதேவனின் சம்பளத்தில் கழித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்கள். இதனால் கௌதம் வாசுதேவ் மீது ரெட் கார்ட் விதிப்பது குறித்து பரிசீலனையில் வைத்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். இந்நிலையில் ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக ஏப்பம் போட நினைப்பது மிக பெரிய அயோக்கியத்தனம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.