எவ்வளவு தான் மனுஷன் தாங்குவார் பாவம்.. இதுக்கு மேல முடியாது… விலை உயர்ந்த காரை விற்கும் விஜய்…

0
Follow on Google News

தென்னிந்திய சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் விஜய். விஜய்க்கு கார் என்றாலே மிகவும் பிடிக்கும் என்பதாலேயே, அவர் வீட்டில் மினி கூப்பர், இன்னோவா, BMW போன்ற பல்வேறு உயர் ரக கார்களை வாங்கி வைத்திருக்கிறார். என்னதான் வரிசையாக சொகுசு கார்களை வாங்கி குவித்தாலும், அவர் வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் தான் அவருக்கு மிகவும் பிடிக்குமாம்.

அந்த காரை மட்டும் விஜய் தான் ஓட்டிச் செல்வாராம். பொது நிகழ்ச்சிகள், சினிமா ஈவென்ட்கள் போன்றவற்றுக்கு இந்த ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரைத்தான் பயன்படுத்துவாராம் விஜய். ‛பீஸ்ட்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு நாள் அன்று, இந்த ரோல்ஸ்ராய்ஸில்தான் இயக்குநர் நெல்சன், டான்ஸ் மாஸ்டர் சதீஷ், ஹீரோயின் பூஜா ஹெக்டே, நடிகை அபர்ணா தாஸ் என்று பீஸ்ட் குழுவினரை அந்தக் காரில் ஏற்றி ஒரு ஜாலி ரவுண்ட் வந்தார் விஜய்.

அந்த அளவிற்கு Rolls-royce கார் மீது தீரா காதல் கொண்டிருந்த விஜய், இப்போது அந்த காரை விற்பனைக்கு விட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. நடிகர் விஜய் மிகவும் ஆசைப்பட்டு வாங்கிய rolls-royce காரை திடீரென விற்பதற்கு காரணம், அந்த காரை வாங்கியதில் இருந்தே அவர் சந்தித்த எக்கச்சக்கமான பிரச்சனைகள் தான் என்று கூறப்படுகிறது.

ஏனெனில், விஜய் முதன் முதலில் புத்தம் புதுசாக rolls-royce coast காரை வாங்கிய போது, இந்தியாவில் அந்த சொகுசு காருக்கான இறக்குமதி வரி 137% விதிக்கப்பட்டது. இதனால் சொகுசு கார் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “ஏழை எளிய மக்கள் வாங்கும் தீப்பெட்டிக்கு கூட வரி விதிக்கப்படுகிறது.

இந்திய குடிமகனாகிய ஒவ்வொருவரும் வரி செலுத்துவது கட்டாயம். சினிமாவில் ரியல் ஹீரோக்களாக மட்டும் இருந்தால் போதாது ரியல் வாழ்க்கையிலும் ஹீரோவாக இருக்க வேண்டும். வரி என்பது நன்கொடை அல்ல அது இந்திய தேசத்திற்கு ஒவ்வொருவரும் அளிக்க வேண்டிய கட்டாய பங்களிப்பு” என்று கூறி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் கட்டுமாறு தீர்ப்பு வழங்கியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான செய்தி அந்த சமயத்தின் செய்தி ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டன. இதனால் பல்வேறு தரப்பினரும் விஜயை கடுமையாக சாடினார்கள். ஆசை ஆசையாக வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ்காரினால் விஜய்க்கு கெட்ட பெயர் ஆனது. மேலும் அந்த கார் வாங்கிய பின்பு தான் விஜய் அவருடைய தந்தைக்கு பிரச்சனை ஏற்பட்டு இது வரை இருவரும் பேசவில்லை. மேலும் விஜய் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக விஜய்யை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இப்படி விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ்கார் வந்ததில் இருந்தே விஜய்க்கு பிரச்சனை தான். இந்நிலையில் தற்போது விஜய் பயன்படுத்திய கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் இல் விற்பனைக்கு வந்துள்ளது. Empire Autos எனும் ப்ரீமியம் கார் டீலர்ஷிப்பில், விஜய் பயன்படுத்திய அந்தக் காரை விற்பனைக்கு விட்டுள்ளார்கள் இன்ஸ்டா வலைதளத்தில் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார், 360 டிகிரியிலும் படம்பிடிக்கப்பட்டு, விற்பனைக்கு விடப்பட்டிருக்கிறது.

விஜய் பயன்படுத்திய கார் வகை கோஸ்ட் சீரிஸ் 1 மாடல். இது இப்போது 2.6 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இது Negotiable Price தானாம்.2012-ல் ரிஜிஸ்ட்டர் பண்ணப்பட்ட அந்தக் காரின் ஓடோ மீட்டர் ரீடிங் 22,000 கிமீ. காரில் எந்த இடத்திலும் சிறு கீரை கூட இல்லை நல்ல கண்டிஷனில் உள்ளது என்று கூறப்படுகிறது. காரில் உள்ள எலெக்ட்ரானிக் சமாச்சாரங்கள் கோளாறில்லாமல் பக்காவாக வேலை பார்க்கின்றன என்றும் டீலர்ஷிப்பில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளன. இப்படி ஆசையாக வாங்கிய காரை ராசி இல்லாமல் தான் விஜய் விற்பனைக்கு விட்டு விட்டார் என்று கூறப்படுகிறது.