பெரும் நஷ்டம்…. விஜய் வீட்டை முற்றுகையிடும் தியேட்டர் உரிமையாளர்கள்..! என்ன செய்ய போகிறார் விஜய்.?

0
Follow on Google News

ரஜினிகாந்த் நடித்து திரைக்கதை வசனம் எழுதி சொந்த தயாரிப்பில் 2002ம் ஆண்டு வெளியான படம் பாபா, சுமார் மூன்று வருட இடைவெளிக்கு பின்பு ரஜினி நடிப்பில் வெளியான பாபா படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனை தொடர்ந்து பாபா படத்தை வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சென்னையில் உள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டு நஷ்ட தொகை கேட்டு குரல் கொடுத்து வந்தனர்.

ரஜினிகாந்த் சொந்த தயாரிப்பில் வெளியான படம் பாபா என்பதால், அந்த படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய பணம் கொடுத்து சமாதானம் செய்தார் ரஜினிகாந்த், இதற்கு பின்பு ரஜினி நடிப்பில் வெளியான குசேலன், லிங்கா போன்ற படங்கள் தோல்வியை தழுவிய போது மீண்டும் திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்ட்ட தொகை கேட்டு குரல் கொடுக்க கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுவிட்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் தற்பொழுது சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட்,

இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை, படம் வெளியான அடுத்த நாளே படம் பார்க்க ஆட்கள் இல்லாமல் பீஸ்ட் படத்தை வெளியிட்ட திரையரங்குகள் காற்று வாங்கியது. பீஸ்ட் படம் வெளியான அடுத்த நாள் கர்நாடக நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான KGF படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு பக்கம் KGF படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கையில், மறுபக்கம் பீஸ்ட் படத்தை பார்க்க ஆட்கள் இல்லாமல் மண்ணை கவ்வி படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் பல திரையரங்குகளில் பீஸ்ட் படத்தை தூக்கிவிட்டு KGF திரையிடப்பட்டது. இது இனி வரும் காலங்களில் படைப்புகள் நன்றாக இருந்தால் யார் நடித்திருந்தாலும் தமிழக மக்கள் அங்கிகரிப்பார்கள், குப்பை படத்தில் நட்சத்திர நடிகர் நடித்திருந்தால் கூட இனி மக்கள் ஏமாறுவதர்க்கு தயாரக இல்லை என்பதை இது உணர்த்தியுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தை வெளியிட்ட திரையரங்குகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இதனை தொடர்ந்து நஷ்ட தொகை கேட்டு அந்த படத்தின் நடிகர் விஜய்யிடம் முறையிடுவதற்காக திரையரங்கு உரிமையாளர்கள் விஜய் வீட்டை முற்றுகையிடலாம் என கூறப்படுகிறது, அப்படி நஷ்ட தொகை கொடுக்கவில்லை என்றால் விஜய் புதிய படத்தை திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்ற படலாம் என்று கூறப்படுகிறது .

அழிவை நோக்கி தமிழ் சினிமா … இன்றைய சினிமா குறித்து முக்கிய பிரபலம் என்ன சொல்கிறார் தெரியுமா.?