நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் ஜெய்பீம், இந்த படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. குறிப்பாக வன்னிய சமூகத்துக்கு எதிராக சில காட்சிகள் ஜெய்பீம் படத்தில் இடப்பெற்று இருந்ததாக கூறி, வன்னிய அமைப்புகள் மத்தியில் கடும் எதிப்பு கிளப்பியது, பின் இந்த விவகாரம் வன்னிய சமூக மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து. சர்ச்சைக்குரிய காட்சிகள் ஜெய்பீம் படத்தில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இதற்கு பாமக தரப்பில் இருந்து அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு தகுந்த முறையில் பதில் அளிக்காமல், தன்னுடைய தவறை நியாயப்படுத்தி சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தது, மேலும் வன்னிய சமூக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏற்கனவே வன்னிய அமைப்புகள் மற்றும் பாமகவுக்கு எதிராக அரசியல் காலத்தில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்தது.
ஜெய்பீம்படம் குறித்து நடிகர் சூர்யாவை பாராட்டி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து ‘மக்கள்தொகையில் மிகச் சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும் தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என திருமாவளவனை புகழ்ந்து நடிகர் சூரிய பதில் அறிக்கை வெளியிட்டார்.
இதன் பின்பு இந்த விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியினர் கருத்து தெரிவித்து வந்ததை தொடர்ந்து மேலும் இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக உருவெடுத்து, வன்னிய சமூகத்தில் இருந்த சூர்யா ரசிகர்கள், சூர்யா புகைப்படத்தை தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் தனக்கு நன்றி தெரிவித்த போராளி சூர்யாவுக்கு எமது வாழ்த்துகள்” என மீண்டும் ஒரு அறிக்கையை திருமாவளவன் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் பிரபல தமிழ் சினிமா இயக்குனர் பேரரசு, தனது டிவீட்டர் பக்கத்தில், திரு. சூர்யா அவர்களே! ஜாதி ரீதியான எதிர்ப்பை சமாளியுங்கள்! அது பிரச்சனைக்கு தீர்வாகிவிடும். ஆனால் ஜாதி ரீதியான ஆதரவை ஏற்காதீர்கள் அதுபெரும் ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்! என தெரிவித்துள்ளது. திருமாவளவனை தான் மறைமுகமாக சுட்டி காட்டி நடிகர் சூர்யாவை எச்சரித்துள்ளார் இயக்குனர் பேரரசு என கூறப்படுகிறது.