தமிழ் சினிமாவில் பொதுவாக முன்னணி நடிகர்களின் படம் வெளியாகும் தேதியில் பெரும்பாலும் மற்ற வேறு எந்த திரைப்படமும் வெளியாகாது. அந்த வகையில் முன்னணி நடிகர்களின் படம் தனியாக வெளியாகுவதால் போட்டிக்கு எந்த ஒரு திரைப்படமும் இல்லாத காரணத்தினாலும். படம் பார்க்க விரும்பும் மக்கள் இந்த படத்தை தான் பார்த்தாக வேண்டும் என்கின்ற கட்டாயத்தினால், படம் நன்றாக இல்லை என்றாலும் கூட முதலுக்கு பெரும் அளவு மோசம் இல்லாமல் தயாரிப்பாளர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.
விஜய் நடித்த வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று முன்பே படகு குழுவினர் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், அதே தேதியில் துணிவு படத்தை வெளியிட்டு இம்முறை யார் உண்மையிலே நம்பர் ஒன் என்பதை பார்த்து விட வேண்டும் என்று களம் இறங்கினார் அஜித். அந்த வகையில் ஆரம்பத்தில் தியேட்டர்கள் பிரச்சனையை சந்தித்து வந்த வாரிசு கடும் போராட்டத்திற்கு பின்பு ஒரு வழியாக துணிவு படத்திற்கு சமமான திரையரங்குகளை பெற்றது.
இரண்டு படம் வெளியாவதற்கு நாட்கள் நெருங்க நெருங்க அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்தது. ஆனால் வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவு மக்களை குறைத்தது.
படம் வெளியாவதற்கு முன்பே வாரிசு படத்தின் ரிசல்ட் என்ன என்று டிரைலரை பார்த்து தெரிந்து கொண்டவர்கள், இருந்து திரைக்கு வரட்டும் என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொங்கல் பண்டிகைக்கு துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் நேரடியாக மோதிய நிலையில், வாரிசு படம் மெகா சீரியல் என்கின்ற விமர்சனத்துடன் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வியுள்ளது.
இந்த நிலையில் வாரிசு படம் வெற்றி அடைந்து விட்டது என்று நடிகர் விஜய் வீட்டிற்கு சென்று படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ் மற்றும் இயக்குனர் வம்சி ஆகியோர் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய நிலையில் படத்தின் உண்மையான வசூல் என்னவென்று தயாரிப்பாளர் நன்கு உணர்ந்திருப்பார். அந்த வகையில் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு வரவேற்பு இல்லை என்றாலும் வாரிசு வசூலை அதிகரிப்பதற்காக புதிய திட்டத்துடன் களமிறங்கியுள்ளார் தயாரிப்பாளர் தில்ராஜ்.
அந்த வகையில் வாரிசு படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகாவை தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் வாரிசு படம் ஓடும் திரையரங்குகளுக்கு அழைத்துச் சென்று படத்தை ப்ரோமோஷன் செய்து வசூலை அதிகரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாகவும். அடுத்து சில நாட்களில் தமிழகம் முழுவதும் இந்த படத்தை ப்ரொமோட் செய்வதற்கான வேலையில் இறங்க உள்ளார்கள் வாரிசு படக் குழுவினர் என்று கூறப்படுகிறது.