பிரபல தயாரிப்பாளர் மறைந்த ராமநாராயணன் வெறும் 28 நாளில் ஒரு படத்தை எடுத்து முடித்து மிகப் பெரிய வெற்றியை கொடுத்து லாபத்தை சம்பாரிக்க கூடிய தயாரிப்பாளர். சுமார் 100 படங்களுக்கு மேல் அவருடைய தேனாண்டாம் பால் பிலிம்ஸ் தமிழ் சினிமாவில் எடுத்து சாதனை படைத்துள்ளது. படத்தின் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மிகக் குறுகிய பட்ஜெட்டில் படம் எடுத்து சிறு தயாரிப்பாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்தவர் ராமநாராயணன்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் நூற்றுக்கு மேல் படங்களை எடுத்த தேனாண்டாபால் பிலிம்ஸ் நடிகர் விஜய் நடிப்பில் மெர்சல் என்கின்ற ஒரே ஒரு படத்தை எடுத்து விட்டு அடுத்து அவர்களால் படம் தயாரிக்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார்கள். இந்த படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திப்பதற்கு விஜய் காரணம் இல்லை என்றாலும் அந்த படத்தில் படத்தை இயக்கிய அட்லி தான் காரணமாக இருந்துள்ளார்.
இருந்தாலும் அட்லியை விஜய் ஆரம்பத்திலிருந்து கண்டித்து இருக்க வேண்டும் அல்லது கேள்வி கேட்டிருக்க வேண்டும் என்கின்றனர் சினிமா துறையினர். காரணம் அடலியை நம்பி பெரும் தொகை முதலீடு செய்ய எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் முன்வரவில்லை. ஒரு தயாரிப்பு நிறுவனம் அந்த நடிகரை நம்பித்தான் பெருந்தொகையை முதல் வீடு செய்ய முன் வருகிறது.
அந்த வகையில் அந்த முன்னணி நடிகர்கள் கை காட்டும் எந்த ஒரு இயக்குனரையும் ஏற்றுக்கொண்டு அந்த இயக்குனரை முன்னணி நடிகர் தேர்வு செய்து விட்டார் என்கின்ற ஒரே காரணத்திற்காக. இயக்குனர் இழுவைக்கலாம் வருகின்றது தயாரிப்பு நிறுவனம். இதனால் குறிப்பிட்ட பட்ஜெட்டை விட அதிகம் செலவுகளை இழுத்து விட்டு விடும் அட்லி போன்ற இயக்குனர்களின் அடர்சிட்டியை சகித்து கொண்டு தான் படத்தை தயாரிக்கிறார்கள்.
ஆனால் நடிகர் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் நம்மை நம்பி பணம் போட்டவர்ளுக்கு லாபத்தை ஈட்டும் தருவ வகையில், அட்லி போன்ற இயக்குனர்களிடம் பல கேள்விகளை ஆரம்பத்திலிருந்து விஜய் கேட்டிருக்க வேண்டும். அந்த வகையில் குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை எடுக்க வேண்டும், எதற்கு இந்த வீண் செலவு, பட்ஜெட்க்குள் எடுக்க வேண்டும் என அட்லீயை கிடுக்கு பிடி பிடித்திருக்க வேண்டும் விஜய்.
ஆனால் தனக்கு சம்பளம் கிடைத்தால் போதும் தயாரிப்பாளர் எக்கேடு கெட்டு போனால் நமக்கு என்ன என்று இருப்பதால்தான், விஜய் போன்ற முன்னனி நடிகரை நம்பி பல கோடிகளை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு இறுதியில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. இருந்தும் அந்த விஜய் போன்ற நடிகரின் இமேஜ் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தாங்கள் அடைந்த நஷ்டத்தை வெளியில் தெரிவிக்காமல்,
நஷ்டம் அடைந்த படத்தை வெற்றி பெற்றுவிட்டது என அறிவித்து விட்டு, சோகத்தை மனதில் மறைத்துக்கொண்டு வெளியில் ஒரு போலியான சிரிப்புடன் அந்த வெற்றி விழாவை கொண்டாடும் தயாரிப்பாளர்கள் மீண்டும் அந்த நடிகர் ஒரு கால் தருவார், ஏற்கனவே அவரால் நாம் இழந்த நஷ்டத்தை மீட்டெடுத்துவிடலாம் என்கின்ற நம்பிக்கையில் தான் முன்னணி நடிகர்கள் அடையும் தோல்வி படங்களை வெற்றி விழாவாக கொண்டாடுகிறார்கள்.
அந்த வகையில் தேனாண்டாம்பாள் ஃபிலிம் தயாரிப்பில் மெர்சல் படம் படுதோல்வி அடைந்த பின்பு நடிகர் விஜய் அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு கால் சீட் தருவதாக கூறப்பட்ட நிலையில், இதுவரை பல வருடங்கள் கடந்தும் இன்னும் விஜய் கால் சீட் தரப்படவில்லை என கூறப்படுகிறது.