இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய் – திரிஷா முதல் முதலில் ஜோடி சேர்ந்து நடித்த படம் கில்லி, இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் படம், மேலும் இந்த படத்தில் விஜய் – திரிஷா இருவருக்கும் இடையில் செமிஸ்டரி அருமையாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது என அப்போது பரவலாக பேசப்பட்டது. மேலும் கில்லி படத்தின் போது விஜய் – திரிஷா இருவருக்கும் நெருக்கம் அதிகரித்து ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழகி வருவதாக கிசு கிசுக்கப்பட்டனர்.
இதன் பின்பு திருப்பாச்சி படத்தில் இயக்குனரிடம் சிபாரிசு செய்து தனக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைத்துள்ளார் விஜய் என்று அப்போது கூறப்பட்டது. இந்த படமும் ஹிட் அடிக்க, விஜய் – திரிஷா கூட்டணி வெற்றி கூட்டணி என பரவலாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்ததை தங்களுக்கு ஜாதகமாக்கி கொண்டது இந்த ஜோடி. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஆதி, குருவி என திரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடித்தார் விஜய்.
ஆதி படத்தின் படப்பிடிப்பின் போது படத்தின் இடைவெளியில், திரிஷா – விஜய் இருவரும் தனியாக கேரவன் உள்ளே நீண்ட நேரம் இருப்பதும், பின்பு படப்பிடிப்பு தொடங்கியதும் இருவரும் ஜோடியாக வெளியில் வருவதாக அப்போது சினிமா வட்டாரத்தில் பரவலாக கிசு கிசுக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து உச்சகட்டமாக வெளிநாடு கதை களம் கொண்ட குருவி படத்தில் விஜய் – திரிஷா இருவரும் ஜோடி சேர்ந்தது அவர்களுக்கு வசதியாக போனது.
வெளிநாட்டில் படப்பிடிப்பு என்பதால் இருவரும் வெளிநாட்டில் நெருக்கமாக இருப்பதாக கிசு கிசு வெளியானது, இதனை தொடர்ந்து இவர்களின் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க, இந்த தகவல் விஜய் மனைவி சங்கீதாவுக்கு சென்றுள்ளது. இதன் பின்பு விஜய் குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க, கணவர் விஜய் இனி திரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடிக்க கூடாது என சங்கீதா கண்டிஷன் போட்டுவிட்டார் என கூறப்பட்ட நிலையில்,குருவி படத்திற்கு பின்பு விஜய் – திரிஷா ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை.
இந்நிலையில் தற்பொழுது சினிமாவில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள திரிஷா, விஜய் சிபாரிசில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய் உடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே திரிஷா உடன் கிசு கிசுவில் சிக்கி வீட்டில் பெரும் பிரச்சனையை சந்தித்து, அதன் பின்பு திரிஷா உடன் ஜோடி சேர்வதை தவிர்த்து வந்த விஜய், தற்பொழுது மீண்டும் திரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் தொடங்குவதர்க்கு முன்பே அவருடைய வீட்டில் பிரச்சனை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
மீண்டும் கணவர் திரிஷா உடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை சங்கீதா விரும்பவில்லை என்றும்.ஆனால் திரிஷா தன்னுடைய படத்தில் இருந்து நீக்குவதற்கு விஜய் மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது. இதனால் கணவர் விஜய் மீது உள்ள கோபம் காரணமாக லண்டனில் இருக்கும் சங்கீதா, சமீபத்தில் நடந்த விஜய் நடித்த வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவிற்கு வராமல் தவிர்த்ததற்கு காரணம் கூட விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் இன்னும் சமரசம் ஆகவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் அவரது மனைவியை விவாகரத்து செய்ய போகிறார் என உறுதி படுத்தாத செய்திகள் ஓன்று உலா வந்து கொண்டிருக்கையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்று மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே நடிகை திரிஷாவுக்கு வீடு இருக்கும் நிலையில், தற்பொழுது விஜய் வசிக்கும் நீலாங்கரை வீட்டின் அருகில் சுமார் 35 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வீடு ஒன்றை திரிஷா வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் திரிஷா வீடு வாங்குவதற்கு பின்னணியில் விஜய் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் மனைவி சங்கீதாவை விஜய் விவாகரத்து செய்ய போகிறார் என்கிற கிசு கிசுக்கு ஒருபக்கம் பரவி வரும் நிலையில், மறுபக்கம் திரிஷாவை விஜய் இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக கிசு கிசுக்கப்பட்டு வருகிறது, இதனால் சம்பந்தப்பட்டவர்கள் இது குறித்து விளக்கம் அளித்தால் மட்டுமே இது போன்ற செய்திகளுக்கு முற்று புள்ளி வைக்க முடியும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.