என்ன வந்தாலும் ஒரு கை பார்த்துக் கொள்வோம்… உதயநிதி விவகாரத்தில் பின் வாங்காத விஜய்..

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான துணிவு படத்தை தமிழ்நாடு திரையரங்கு உரிமையை வாங்கி வெளியிட்டது ரெட் ஜெயன் மூவிஸ். இதேபோன்று நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை வாங்கி வெளியிடுவதற்கு ரெட் ஜெய்ன்ட்ஸ் மூவிஸ் முயற்சி செய்தது. ஆனால் பீஸ்ட் பட விவகாரத்தில் உதயநிதி மீது இருந்த அதிருப்தி காரணமாக எந்த ஒரு காரணத்திற்காகவும் தன்னுடைய வாரிசு படத்தை ரெட் ஜெயின்ஸ் மூவிஸ் வெளியிடுவதற்கான உரிமையை தரக் கூடாது என்று தயாரிப்பாளருக்கு கடிவாளம் போட்டு விட்டார் விஜய் .

இந்த நிலையில் வாரிசு படம் வெளியாகும் அதே தேதியில் துணிவு படத்தை களம் இறக்க முடிவு செய்த ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் நடிகர் விஜய்க்கு மிக பெரிய நெருக்கடியையும் கொடுத்தனர். இதனால் விஜய் ஒரு பக்கம் பிடிவாதமாக இருந்தாலும் கோடி கணக்கில் முதலீடு போட்டு படம் எடுத்த வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் சற்று இறங்கி ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ்க்கு கொடுக்க முன் வந்தாலும் கூட நடிகர் விஜய்க்கு ஜெயன்ட் மூவிக்கு கொடுக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்து வந்துள்ளார் நடிகர் விஜய்.

இந்த நிலையில் வாரிசுபடத்தின் உரிமையை வாங்கிய தயாரிப்பாளர் லலித் ஒரு கட்டத்தில் ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ்யிடம் சரண்டர் ஆகும் வகையில் குறிப்பிட்ட சில ஏரியாக்களை ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ்க்கு வாரிசு படத்தை விற்பனை செய்தார். இது விஜய்க்கு விருப்பம் இல்லை என்றாலும் தயாரிப்பாளர் பிடிவாதமாக இருந்ததால் அமைதியாக கடந்து சென்று விட்டார் விஜய் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் துணிவு படத்திற்கு சமமான திரையரங்கு பெறுவதற்கு வழிவகை வாரிசுக்கு செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயின் பிடிவாதத்தினால் பல கட்ட பிரச்சனைகளை சந்தித்து திரைக்கு வந்தது வாரிசு திரைப்படம், இந்நிலையில் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் நடிக்கும் புதிய படத்தை தயாரிப்பாளர் லலித் தயாரிக்கிறார். லியோ படத்தின் தமிழ்நாடு உரிமையை பெறுவதற்கு வழக்கம் போல் ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் முயற்சி செய்துள்ளது.

இந்நிலையில் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் விஜய்யின் நம்பிக்கை கூறிய தயாரிப்பாளராக இருந்து வருகின்றவர். அந்த வகையில் என்ன பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்வோம் இம்முறை ரெட் ஜெயின்ஸ் மூவிஸிற்கு ஏரியா வாரியாக கூட லியோ படத்தை கொடுக்கக் கூடாது என்பதில் விஜய் உத்தரவை ஏற்று நேரடியாக அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் விநியோகஸ்தர்களிடம் லியோ படத்தை லலித் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதும் லியோ படத்தின் விற்பனை பெருமளவு முடிந்துவிட்ட நிலையில் ஒரு சில ஏரியாக்கள் மட்டும் இன்னும் விற்பனை செய்யாமல் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ்க்கு கிடைக்கவில்லை என்றாலும் கடைசி நேரத்தில் ஒரு சில ஏரியாக்கள் மட்டும் ரிலீஸ் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் தற்பொழுது வரை ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ்யிடம் லியோ படத்தை ஏரியா வாரியாக கூட இன்னும் விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ரெட் ஜெயின்ஸ் மூவிஸ் லியோ படம் ரிலீஸ் செய்யப்படாததால் விஜய்க்கு உதயநிதி தரப்பிலிருந்து கடும் நெருக்கடி கொடுக்கப்படலாம் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கையில்,

தற்பொழுது விஜய் விரைவில் அரசியல் என்ட்ரி கொடுக்க இருப்பதால் எந்த ஒரு எதிர்ப்பையும் விஜய் எதிர்கொள்ள தயாராகவே இருப்பதால் தான் துணிந்து இதுபோன்ற செயல்களில் விஜய் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது, அந்த வகையில் உதயநிதி தரப்பிலிருந்து விஜய்க்கு ஏதேனும் நெருக்கடி கொடுத்தால் அது விஜயின் அரசியல் வளர்ச்சிக்கு வழி வகுத்து விடும் என்பதால் லியோ பட விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கண்டு கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும் விஜய்யின் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருப்பதால் அந்த நிகழ்ச்சிக்கு உதயநிதி தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்படும் என்கின்ற செய்தியும் உண்மை இல்லை என கூறப்படுகிறது, காரணம் விஜயை தேவையில்லாமல் சீண்டி அது வரும் விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் லட்சணக்கான விஜய் ரசிகர்களின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதால் விஜய் சீண்டுவதை ஆளும் தரப்பு தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது