லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் மட்டும் சுமார் 60 நாட்கள் படம் பிடிப்பு நடத்துவதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் விறுவிறுப்பாக லியோ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கடும் குளிர் காரணமாக காலை 11 மணிக்கு தொடங்கும் படப்பிடிப்பு மாலை 4 மணிக்கு எல்லாம் முடிந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் அங்கே நிலவும் கடும் குளிர் என்று கூறப்படுகிறது. மாலை 4 மணிக்கெல்லாம் இருட்டாகி விடுவதாகவும், காலை 11 மணிக்கு தான் கடும் குளிர் விலகி படப்பிடிக்கு சாதகமான நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய், திரிஷா உட்பட படபடக்குழு தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றுள்ளது. மேலும் சென்னையிலிருந்து சுமார் 500க்கு மேற்பட்ட லியோ பட குழுவினர் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எந்த நேரமும் சென்று சாப்பிடுவதற்கு அனைத்து வகையான உணவுகளும் படப்பிடிப்பு தளத்தில் தயார் நிலையில் சுட சுட உள்ளது. இதனால் எந்த நேரம் வேண்டுமாலும் அவர்கள் விருப்பத்திற்கு சாப்பிடலாம்.
லியோ படத்தின் பட குழுவிற்கு ஒரு நாள் செலவு மட்டும் சுமார் 75 லட்சம் ரூபாய் ஆகிறது என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டர்வர்களுக்கு சாப்பாடு மற்றும் இதர செலவு மட்டுமே சுமார் 60 கோடிக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது.