தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த அப்டேட்டுகள் தான் வைரலாகி கொண்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் பின் படம் உருவாகி இருக்கிறது. லியோ படத்திற்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. முதலில் தமிழகத்தில் ஐந்து சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு அதற்கான அரசாணையை பிறப்பித்தது. இதனால் சில திரையரங்குகள் 4 மணி காட்சிகளை திரையிட வேலைகளை தொடங்கினர்.
ஆனால் உடனடியாக இன்னொரு அரசாணை வெளியானது அதில் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்றும் ஒன்பது மணிக்கு தான் முதல் காட்சி தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் நாள் ஒன்றுக்கு ஐந்து காட்சிகளுக்கு மேல் திரையிடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது, இது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் லியோ பட குழுவினரை அதிர்ச்சி அடைய செய்தது.
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு நீதிமன்றத்தை நாடி இருந்தது, ஆனால் நீதிமன்றம் 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும், வேண்டுமென்றால் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி கேட்டு தமிழக அரசை முறையிடலாம் என்றும் கூறி இருந்தது. இந்த பிரச்சனை காரணமாக சென்னையில் முக்கிய திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் இதற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாததால் தமிழகத்தில் மட்டும் லியோ படம் காலை 9 மணிக்கு வெளியாகிறது. கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.
இந்தநிலையில் தளபதி என முதலமைச்சர் ஸ்டாலினை அவரது தொண்டர்கள் கொண்டாடி வந்தாலும், தமிழ் சினிமாவில் தளபதி என நடிகர் விஜய்யை தான் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்டில் தளபதி விஜய் அண்ணா என குறிப்பிட்டு ரசிகர்களை உச்சி குளிர செய்து விட்டார். மேலும், நாளை வெளியாக உள்ள லியோ திரைப்படத்தை பார்த்து விட்ட நிலையில், அந்த படத்திற்கான முதல் விமர்சனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
நடிகர் விஜய்யை வைத்து குருவி படத்தை தயாரித்து சினிமா தயாரிப்பாளராக அறிமுகமானவர் தான் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஆதரவான கருத்துக்களையே கூறி வரும் உதயநிதி ஸ்டாலின் சமீப காலமாக ஆட்சி அதிகாரம் மற்றும் விஜய்யின் அரசியல் வருகை காரணமாக அவருக்கு எதிராக செயல்படுகிறார் என்றும் லியோ படத்தின் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு கொடுக்காததால் குடைச்சல் கொடுக்கிறார் என விஜய் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென, தளபதி விஜய் அண்ணாவின் லியோ படம் சூப்பர் என தம்ப்ஸ் அப் கொடுத்துள்ளார்.
மேலும் லியோ ஒரு சிறந்த படம். லோகேஷ் கனகராஜ், அன்பறிவு, அனிருத், விஜய் ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். எல் சி யூ என்ற ஹாஸ்டேக் பதிவிட்டு இருக்கிறது. யூ படம் LCU வா இல்லையா என்று லோகேஷ் கனகராஜ் பொத்தி பொத்தி வைத்து இருந்த ரகசியத்தை இப்படி பொட்டென்று போட்டுடைத்துள்ளார் உதயநிதி. இதனால் லோகி கண்டிப்பாக டென்ஷன் ஆவார் என சமூக வலைதளவாசிகள் கிண்டல் செய்கிறார்கள்.
விஜய் ரசிகர்களோ, எல்.சி.யு. உறுதியாகிவிட்டது. சம்பவம் இருக்கு என ஒருபக்கம் கொண்டாடுகிறார்கள். லியோ படத்தில் ஃபஹத் ஃபாசில் இருப்பதாக விஜய்க்கு மகனாக நடித்த மேத்யூ தாமஸ் கூறியபோதே இது கண்டிப்பாக எல்.சி.யு. தான் என ஆளாளுக்கு பேசினார்கள். இந்நிலையில் அதை உதயநிதி ஸ்டாலின் உறுதி செய்துவிட்டார்.