விஜய் நடித்த லியோ படம் எப்போ தான் ரிலீஸ் ஆகும் என பலருக்கும் இருந்த ஏக்கத்தினை போக்கும் விதமாக தியேட்டர்களில் ரிலீஸாகி மூன்று நாள் கடந்து விட்டது. ஆனால் ஆகாஓஹோ என பேச்சுகள் வரும் என நினைத்தால் ஒரே நெகட்டிவ் விமர்சனமே அதிகமாக குவிந்து வருகிறது. விஜய் நடித்துள்ள லியோ படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன் என வில்லன் பட்டியலே படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கியது. படமும் முதல் சிங்கிள் இருந்து ரிலீஸ் வரை பல கட்ட எதிர்ப்பை சந்தித்தது
ஏற்கனவே படத்தில் விஜய்க்கும், லோகேஷ் கனகராஜுக்கும் சண்டை வந்ததாகவும், பாதி படத்தினை ரத்னகுமார் தான் இயக்கியதாகவும் கூட ஒரு சர்ச்சை வேறு நிலவியது. ஆனால் அதற்கு லலித்குமார், லோகேஷ் என அனைவருமே மறுப்பு தெரிவித்தனர். லோகேஷ் படங்கள் எப்போதும் தனி லெவலில் இருக்கும். ஆனால் ரிலீஸாகி இருக்கும் லியோ படத்தின் இரண்டாம் பகுதி மிகப்பெரிய தொய்வை சந்தித்து இருக்கிறதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், லியோவில் லோகேஷின் ஸ்க்ரிப்ட் சுத்தமாக எடுபடவில்லை என ரசிகர்களே கூறி வந்தனர். லியோ முதல் பாதி லோகேஷ் படமாகவும், இரண்டாம் பாதி விஜய் படமாகவும் உருவாகியுள்ளது. மொத்தமாக பார்க்கும் போது விஜய், லோகேஷ் என இருவரது படங்களாகவும் லியோ இல்லை என ரசிகர்கள் ஏமாற்றம் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் “விஜய் உட்பட பலரும் டிஸ்கஸ் செய்து சில காட்சிகளை மாற்றினோம்,” என்று சொல்லியிருக்கிறார்.
மேலும் அவர் கூறியதாவது, “பீஸ்ட்’ படம் முடிச்சிட்டு ‘வாரிசு’ படத்துக்கு முன்னாடியே இந்தப் படம் எடுக்கலாம்னு இருந்தோம். ‘விக்ரம்’ படம் முடிய கொஞ்சம் டிலே ஆனதால விஜய் சார் ‘வாரிசு’ போயிட்டு வந்தாரு” என்று பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, “அவர் கதை செலக்ட் பண்ணிட்டாரு, அப்புறம்தான் லோகேஷ் வந்து என்கிட்ட கதை சொன்னாரு. நானும் ஜெகதீஷும் தான் கதை கேட்டோம்.நல்லாருக்குன்னு சொல்லிதான் வந்தேன்.
விஜய் சார் நைட்டு போன் பண்ணி கதை கேட்டியே எப்படியிருக்குன்னு கேட்டாரு. இந்த இடத்துல கொஞ்சம் ஆல்டர் பண்ணா நல்லாருக்கும்னு தோணுது, என் ஜட்ஜ்மென்ட் தெரியலன்னு சொன்னேன். உடனே லோகேஷ் கிட்ட பேசினாரு. இந்த மாதிரி இருக்கு, நீங்க என்ன நினைக்கறீங்கன்னு லோகேஷ் கிட்ட கேட்டாரு.
பத்து நாளைக்கு அப்புறம் கொஞ்சம் சேஞ்ச் பண்ணி சார் கிட்ட சொன்னாரு. அதுக்கப்புறம் ஷுட் போனோம்.
இந்தப் படத்துக்கு நிறைய விஷயங்கள் டிஸ்கஸ் பண்ணோம், அதையெல்லாம் விஜய் சாரை வச்சிக்கிட்டுதான் டிஸ்கஸ் பண்ணோம். உதாரணத்துக்கு மார்க்கெட் பைட் நல்லாருக்குன்னு அதிகமாக்கச் சொன்னோம், அப்புறம் மாத்துனாங்க, இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களைச் சொன்னோம்,” என்று லலித்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், லியோ படம் ஆயிரம் கோடி வசூலை பெற வாய்ப்பில்லை. ஹிந்தியில் படம் வெளியாகவில்லை. அதில் நல்ல லாபத்தை எதிர்பார்த்தோம்.
தமிழகத்திலிருந்து 2 லட்சம் பேர் அதிகாலை 4 மணி காட்சியை படம் பார்க்க பக்கத்து மாநிலங்களுக்கு போய்விட்டார்கள். விஜய் இதில் தலையிடவில்லை. அவர் என்னை நீதிமன்றத்தை அணுக சொன்னார். மற்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் ஒரே நேரத்தில் படம் வெளியாக வேண்டும் என அவர் ஆசைப்பட்டார். ஆனால், அது நடக்கவில்லை’ என தெரிவித்தார்.
இப்படி பல மாற்றங்களை விஜய் தரப்பிலிருந்து சொன்னதால்தான் இது முழுமையான லோகேஷ் கனகராஜ் படமாக இல்லாமல் தயாராகி வந்துள்ளது என சிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம், விஜய் இதற்கு முன்பு நடித்து வெளிவந்த ‘பீஸ்ட், வாரிசு’ ஆகியவை தரமான படமாக இல்லையென்பதால் விஜய் இந்தப் படத்தில் ஆலோசனைகளை மட்டுமே சொன்னார் என சிலர் சொல்கிறார்கள். மேலும் அப்போ நீங்களா சேந்து தான் லியோ பர்னிச்சரை உடைச்சீங்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.