விஜய்க்கு அந்த மாதிரி பிரச்சனை…. அது தான் லியோ படம் பிளாப் ஆக காரணம்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வரும் விஜய் இப்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் நடிப்பில் லியோ படம் வெளியானது. லோகேஷ் இயக்கத்தில் வெளியான அந்த படம் ரசிகரகளிடையே ஒரு கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இந்த படம் படு தோல்வியை தழுவும் என சில சம்பவங்களை சுட்டி காட்டி பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

விஜய்க்கு மிருக தோஷம் இருந்து வருவதால், விலங்குகள் மற்றும் பறவைகளின் பேரில் விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்து வருவது வாடிக்கையாகி உள்ளது.அந்த வகையில் விஜய் நடிப்பில் மிருகங்களின் பேரில் வந்த படங்கள் எதுவுமே விஜய்க்கு கைக் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. அந்த வரிசையில் லியோ திரைப்படமும் இணைந்துள்ளது.

கடந்த காலங்களில் விஜய் , த்ரிஷா நடிப்பில் வெளியான பறவையின் பெயரில் வெளியான குருவி படத்தில் ஏன் விஜய் நடித்தார் என்று கேட்கும் அளவுக்கு படு மோசமாக இருந்தது விஜய் நடிப்பில் வெளியான குருவி. அதை தொடர்ந்து எஸ். பி. ராஜ்குமார் இயக்கத்தில் விஜய், தமன்னா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்த சுறா படம் கடந்த 2010ம் ஆணடு வெளியானது. விஜய் சினிமா கேரியரில் படு மோசமான தோல்வியை சந்தித்த படம் சூறா.

கடந்த 2015ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் புலி. இப்படத்தை விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் நெருங்கிய நண்பரான பி டி செல்வகுமார் தயாரித்திருந்தார். புலி படத்தில் வெற்றி பட இயக்குனராக அப்போது இருந்து இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான புலி படம் மிக பெரிய தோல்வியை சந்தித்து அதன் பின்பு அந்த படத்தை இயக்கிய சிம்பு தேவன் எங்கே இருக்கிறார் என்று தேடும் அளவுக்கு படு கேவலமான தோல்வியை கொடுத்த படம் விலங்கு பெயரில் வெளியான புலி.

அடுத்ததாக பரதன் இயக்கத்தில் 2017ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான விஜயின் 60 வது படமான மிருகங்கள் பெயரில் வெளியான ‘பைரவா’ மிக பெரிய தோல்வியை சந்தித்தது. அடுத்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் படு மொக்கையாக அமைத்தது. இப்படி பல வெற்றி பட இயக்குனர்களுடன் விஜய் நடிப்பில் மிருகங்கள் பெயரில் வெளியான அணைத்து படங்களுமே படு தோல்வியை சந்தித்து வந்துள்ளார் நிலையில்.

அந்த வரிசையில் இன்று தமிழ் சினிமாவில் டாப் ஒன் இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படமும் இடம் பிடித்துள்ளது. இப்படி பல வெற்றிப்பட இயக்குனர்கள் விஜய்யை வைத்து எடுக்கும் படத்தின் படு தோல்விக்கு முக்கிய காரணம் விஜய்க்கு மிருக தோஷம் இருந்து வருவதாலும், அதனால் மிருகங்கள் பறவைகள் பெயரில் விஜய் நடிக்கும் படங்கள் தோல்வியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் லியோ படம் வெளியாவதற்கு முன்பே இந்த படம் மிக பெரிய வெற்றியை பெரும் ஆயிரம் கோடி வசூல் சாதனை படைக்கும் என விஜய் ரசிகர்கள் கம்பிக்கு சுத்தி வந்த நிலையில், ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், லியோ நிச்சயம் தோல்வியை சந்திக்கும், விஜய்க்கு மிருகதோஷம் உள்ளது, அதனால் மிருகத்தின் பெயரில் வெளியாக இருக்கும் லியோ படம் தோல்வியை சந்திக்கும் என ஜோதிடத்தின் நம்பிக்கை உள்ளவர்கள் தெரிவித்து வந்தது தற்பொழுது நிரூபணமாகியுள்ளதால், இனி வரும் காலங்களில் விஜய் தன்னுடைய படத்தின் பெயரில் கவனம் செலுத்த வேண்டும் என பலரும் அறிவுரை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.