லியோ ஆடியோ பங்ஷனா.? அரசியல் மாநாடா.? விஜய் அடுத்தடுத்து அதிரடி நகர்வுகள்…

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. அந்த வகையில் லியோ படத்தின் அப்டேட் உடன் விஜய்யின் அரசியல் அப்டேட்ம் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பனையூர் வீட்டில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி உள்ளார். அப்பொழுது விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் விஜய்யிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளார்கள்.

அதில் தொடர்ந்து தளபதி சென்னையில் அவருடைய படத்தின் ஆடியோ நிகழ்ச்சி, ரசிகர்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளை நடத்தி வருகிறார், ஆனால் தளபதி சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் மிக பிரம்மாண்டமான ஒரு ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த வேண்டும். அதற்கு தமிழக முழுவதும் உள்ள ரசிகர்கள் உங்களை சந்திக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் விஜயிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதன் பின்பு நடிகர் விஜய் நீண்ட ஆலோசனைக்கு பின்பு சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார். அதாவது தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியில் உள்ள பொன்மலை ஜி கார்னரில் மிக பிரம்மாண்டமான ஒரு மாநாடு போன்று ஒரு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளார். நடிகர் விஜய் இந்த கூட்டத்திற்கு தமிழக முழுவதும் பட்டி தொட்டி எங்கும் உள்ள அனைத்து விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்து கொள்ளும் வகையில் மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

பொதுவாக விஜய் ஏற்பாடு செய்துள்ள கூட்டம் நடக்கும் அந்த ஜி கார்னரில் நடக்கும் அரசியல் கட்சி கூட்டங்களுக்கு தற்காலிக மேடை அமைக்கப்படும். ஆனால் விஜய் கலந்து கொள்ள இருக்கும் அந்த பிரம்மாண்ட கூட்டத்திற்கு நிரந்தரமாக காங்கிரட் மேடை அமைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது இந்தக் கூட்டம் நடந்து முடிந்த பின்பு அந்த மேடையை நடிகர் விஜய் அன்பளிப்பாகவும் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

மேலும் தமிழக முழுவதும் இருந்தும் வரும் தன்னுடைய ரசிகர்கள் சிரமத்தை மேற்கொள்ளாமல் இருப்பதற்காக அதே மைதானத்தின் ஒரு பகுதியில் டாய்லட்டும் நிரந்தரமாக கட்டுவது, மேலும் இந்த கூட்டம் முடிந்ததும் அந்த டாய்லெட்டை அந்த மைதானத்திற்கு அன்பளிப்பாக கொடுப்பதும் முடிவு செய்துள்ளார் நடிகர் விஜய்.

அதே போன்று விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் தவிர்த்து வேறு யாரும் உள்ளே வராமல் இருப்பதற்காக கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டையும் ஏற்பாடு செய்வதென முடிவு செய்துள்ளது. அந்த பயோமெட்ரிக் அடையாள அட்டையை முகப்பில் நுழைவாயிலில் ஸ்கேன் செய்த பின்வே அவர்கள் அந்த கூட்டம் நடக்கும் மைதானத்திற்குள் நுழைய முடியும்.

இந்த கூட்டத்திற்காக விஜய் மக்கள் மன்றம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு அடுத்தடுத்த வேலைகளை தொடங்க உத்தரவிட்டுள்ளார் விஜய். மேலும் திருச்சியில் நடைபெற இருக்கும் கூட்டத்திற்கு வரும் தன்னுடைய ரசிகர்கள் விஜய் பெயரை காப்பாற்றும் வகையில் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் என்பதற்காக அனைத்து மக்கள் விஜய் மக்கள் மன்ற மாவட்ட தலைவர்கள ஒரு வாய்மொழி உத்தரவு சென்றுள்ளது.

ரசிகர்கள் இந்த கூட்டத்தில் கண்ணியமாக கலந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஒரு விதிமுறையும் வாய் மொழியாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் விஜய் ரசிகர்கள் மன்றம் கூட்டம் என இவை இரண்டையுமே திருச்சியில் நடக்க இருக்கும் கூட்டத்தில் ஒன்றாக நடத்தும் திட்டத்தில் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது. தன்னுடைய பலம் என்ன என்பதை தமிழக அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் காண்பித்து இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் திருச்சியில் நடக்கும் விஜய் கலந்து கொள்ள இருக்கும் கூட்டத்தை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.