பெத்த தாயை மதிக்க கற்று கொள்ளுங்க விஜய் … யாரை ஏமாற்ற மேடையில் இந்த நாடகம்.. என்ன பழக்கம் விஜய் இது.?

0
Follow on Google News

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியிருந்தார். தனது கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என அவர் அறிவித்த நிலையில், கட்சியை எப்போது தொடங்குவார், என்ன பெயர் இருக்கும் என பல எதிர்பார்ப்புகளுடன் கட்சி தொடங்கப்பட்டிருந்தது. ஆனால் கட்சியின் கொடி என்ன என தெரியாமல் இருந்தது.

இந்த சூழலில் கட்சிக் கொடியையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார்.இந்த விழாவுக்காக நடிகர் விஜய் தனது நீலாங்கரை வீட்டிலிருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். இந்த விழாவில் கட்சியின் பொருளாளர், கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விஜய்யின் கொடி அறிமுக விழாவிற்கு அவருடைய தாய் ஷோபாவும், தந்தை சந்திரசேகரும் வருகை தந்தனர்.

இதையடுத்து உறுதிமொழி ஏற்கப்பட்ட பின்னர் விஜய் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி பனையூர் கட்சி அலுவலகத்திலும் அவர் கொடியை ஏற்றி வைத்தார். இதை தவெக நிர்வாகிகள் கைதட்டி வரவேற்றதுடன் கட்சி கொடி பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது. கொடியை அறிமுகம் செய்த கையோடு மேடையேறி பேசிய விஜய், விரைவில் தங்கள் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த இருப்பதையும் உறுதிப்படுத்தினார்.

தன்னுடைய உரையின் போது தனது தாய், தந்தைக்கு நன்றி தெரிவிக்க மறந்த விஜய், பின்னர் மீண்டும் மேடையேறி அவர்கள் இருவருக்கும் நன்றி கூறிவிட்டு சென்றார். மேடையில் தாய், தந்தை மீது பாசத்தை பொழிந்த விஜய், அந்த விழா முடிந்ததும் செய்த செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.அது என்னவென்றால், விழா முடிந்ததும் அங்கு வந்திருந்த ஊடகத்துறையினருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தார் விஜய்.

அப்போது விஜயின் தாய் ஷோபா, புஸ்ஸி ஆனந்தை அழைத்து கொடியேற்ற விழா வெற்றிக்காக கை கொடுத்து வாழ்த்தினார். இதையடுத்து அவ்வழியாக வந்த விஜய்க்கும் வாழ்த்து சொல்ல அவரது கையை ஷோபா பிடித்தார். ஆனால் விஜய்யோ தனது தாயை கண்டும் காணாமல் அவர் பாட்டுக்கு நிற்காமல் புஸ்ஸி ஆனந்த் பின்னால் சென்றார். இதனால் ஷோபாவின் முகமே மாறிவிட்டது.

ஆனால் நாகரீகம் கருதி பிள்ளையை விட்டுக் கொடுக்காமல், தன் பிள்ளை பிஸியாக இருப்பதை போன்றே ஒரு சிரிப்பை பதிலாக கொடுத்துவிட்டு சென்றார் சோபா. இந்த வீடியோ இணையத்தில் காட்டு தீ போல் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விஜய்யை கடுமையாக சாடி வருகின்றனர். மேடையில் பாசமாக பேசியதெல்லாம் நடிப்பா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தாயை மதிக்காமல் சென்ற விஜய்யை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். விஜய்யின் கட்சி நிகழ்ச்சியில் அவரது தாய் ஷோபாவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் கலந்துகொண்டது இதுவே முதன்முறை ஆகும். கடந்த 2021-ம் ஆண்டு விஜயின் தந்தை சந்திரசேகர் “விஜய் மக்கள் இயக்கத்தை” அரசியல் கட்சியாக மாற்றி இருந்தார்.இந்த செயல் விஜய்க்கு கோபத்தை ஏற்படுத்தியதோடு தன் தந்தை மீதே கேஸ் போடும் அளவுக்கு கொண்டு சென்றிருந்தது.

அதன் பிறகு தான் மகனுக்கும் பெற்றோருக்குமான உறவு என்பது அந்த அளவுக்கு ஒட்டாமல் போயிருந்தது. தனது தந்தையின் அறுபதாவது பிறந்த நாள் விழாவுக்கு கூட விஜய் செல்லவில்லை. ரசிகர்கள் மத்தியில், எப்போது விஜய் பேசினாலும், தாய் தந்தையரை கவனித்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்துவார், ஆனால் அவரே தனது தாய் தந்தையை மதிப்பதில்லை என அப்போதே விமர்சிக்கப்பட்டிருந்தார்.