நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் தமிழ் புத்தான்டு அன்று வெளியான படம் பீஸ்ட், இந்த படம் படு தோல்வியை தழுவி மண்ணை கவ்வியது. இதன் பின்பு விஜய் நடிக்கும் புதிய படத்தை பிரபல தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்குகிறார், தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிக்கிறார், இதில் விஜய் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா, மற்றும் நடிகர் ஷாம், சரத்குமார், யோகிபாபு போன்றவர்கள் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில் இடம் பெற்றுள்ளனர்.
குடும்ப பின்னணி படமாக உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும்நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு கஹைதராபாத்தில் நிறைவடைந்தது. இதே போன்று போனி கபூர் தயாரிப்பில், H.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறார். இந்நிலையில் பெப்சி தொழிலாளர் சங்க தலைவர் இயக்குனர் செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் நடிகர் அஜித் குமார் தொடர்ந்து ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்துவது, தமிழகத்தில் உள்ள பெப்சி தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. ஆகையால், தமிழகத்தில் படப்பிடிப்பு நடந்த வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி தெரிவித்திருந்தார். தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்தி வரும்நிலையில், குறிப்பிட்டு நடிகர் அஜித்தை மட்டு சுட்டி காட்டி ஆர்.கே.செல்வமணி பேசியதில் உள்நோக்கம் ஏதும் இருக்கிறதா என்கிற சந்தேகம் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார்க்கு எதிராக ஆர்.கே.செல்வமணி பேசியுள்ள இந்த நேரத்தில் நடிகர் விஜய், தன்னுடைய படப்பிடிப்பை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு மாற்றினார் தனக்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என திட்டமிட்டு இது குறித்து விஜய் தரப்பில் இருந்து அவர் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் படப்பிடிப்பை தமிழ்நாட்டுக்கு மாற்றுவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றால் அதிக செலவாகும், அதனால் தான் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்துகிறோம் என்பது உங்களுக்கே தெரியும், என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து விளக்கம் கொடுத்துள்ளனர், ஆனால் தொடர்ந்து விஜய் தரப்பில் இருந்து படப்பிடிப்பை ஹைதராபாத்தில் இருந்து தமிழகத்தில் ஏதாவது ஒரு இடத்திற்கு மாற்றினால் அங்கே இருக்கும் தொழிலார்களுக்கு வேலை கிடைக்கும் என தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் டென்ஷனான தயாரிப்பு நிறுவனம் தரப்பு, நடிகர் விஜய் இந்த படத்தில் நடிக்கும் வேலையை மட்டும் பார்க்கட்டும், தேவையில்லாமல் தயாரிப்பு வேலைகளில் மூக்கை நுழைக்க வேண்டாம், என அவர்களிடம் பேசிய விஜய் தரப்பினரிடம் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தை சேர்ந்த தயாரிப்பாளர்கள் படத்தில் விஜய் நடிக்கும் போது, விஜய் என்ன சொல்கிறாரோ அதை தான் தயாரிப்பு நிறுவனம் பின்பற்ற வேண்டும், ஆனால் ஆந்திராவை சேர்ந்த தயாரிப்பாளரிடம் விஜய் பருப்பு வேகவில்லை என்றும், விஜய் மரியாதையை இழந்தது மிச்சம் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.