கத்து குட்டி விஜய்… புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை தான்…

0
Follow on Google News

நடிகர் விஜய்யின் அரசியல் முன்னெடுப்புகள் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கையில், விஜய்க்கு இருக்கும் விசில் அடிக்கும் ரசிகர்களை மட்டுமே வைத்து கொண்டு விஜய் அரசியலில் களம் இறங்கினால் படு மோசமான பின்விளைவுகளை விஜய் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றனர் அரசியல் வல்லுநர்கள் , நடிகர் விஜய் என்பது தமிழகம் முழுவதும் ஒரு தெரிந்த முகம், ஆனால் அவருடைய ரசிகர் மன்றத்தின் மாவட்டச் செயலாளராக இருக்கின்றவர்கள் எத்தனை நபர் மக்களுக்கு தெரியும் என்கிற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

விஜய்க்கு என்ன தான், கிராமம் தோறும் அவருக்கு ரசிகர்கள் இருந்தாலும் கூட, அந்த கூடம் விஜய் படத்தை திரையில் பார்த்து விசில் அடித்து கொண்டாடவும், விஜய் கட் அவுட்க்கு பால் அபிஷேகம் செய்து விஜய் அண்ணா தான் சினிமாவில் மாஸ் என்று, சினிமாவில் விஜய்யின் பலத்த காண்பிக்கலாமே தவிர, அவர்களால் அரசியலில் களம் கண்டு ஓட்டு வங்கியை உருவாக்கி முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

சினிமாவில் இருந்து வந்து எம் ஜி ஆர் முதல்அமைச்சராகவில்லையா.? என எம்ஜிஆர்ரை பின்பற்றி அரசியலுக்கு வந்த நடிகர்கள் அனைவரும் மண்ணை கவ்வியது தான் வரலாறு, இதில் விஜயகாந்த் மட்டும் அரசியலில் பாதி வெற்றியை பெற முடிந்தது, இருந்தும் அவரால் எம்ஜிஆர் போன்று முழுமையான வெற்றியை அரசியலில் பெற முடியவில்லை.

இந்நிலையில் விஜய் போன்று சினிமாவின் நடித்துக் கொண்டிருந்த போது திடீரென்று அரசியலுக்கு என்ட்ரி கொடுத்தவர் எம்ஜிஆர் அல், 1967 ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல் முதலாக திமுக ஆட்சி அமைத்து அண்ணாதுரை முதல்வராக அரியணை ஏறுவதற்கு முக்கிய பங்காற்றியவர் எம்ஜிஆர். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் தொடர்ந்து தன்னை அரசியலில் அர்ப்பணித்துக் கொண்டு திமுகவின் வெற்றிக்காக அயராது பாடுபட்டவர் எம்ஜிஆர்.

என்னுடைய இதயக்கனி எம்ஜிஆர் என்றும், தம்பியின் முகத்தை காட்டினால் 30 ஆயிரம் ஓட்டு விழும் என எம்ஜிஆர் க்கு புகழாரம் சூட்டியவர் அண்ணாதுரை. அந்த வகையில் அண்ணாதுரை உயிரோடு இருக்கும்போதே, சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் அரசியலிலும் முன்னணி தலைவராக வலம் வந்தவர் எம்ஜிஆர். மேலும் அரசியல் கட்சி தொடங்கும் முன்பே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டும் வென்றவர், சிறு சேமிப்பு துணைத்தலைவராகவும் இருந்தவர் இப்படி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் எம் ஜி ஆர்.

திமுகவில் இருந்து எம்ஜிஆர் விலகி கட்சி தொடங்குவதற்கு முன்பே சுமை 20 வருடங்களுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்டு வந்தவர் எம்ஜிஆர். இந்நிலையில் தற்பொழுது விஜய் அரசியல் என்ட்ரி என்பது, தற்பொழுது தான் விஜய் அரசியலில் முதல் அடியை எடுத்து வைக்க போகிறார் என்றும், அதுவும் விஜய் தன்னுடைய அரசியல் அறிவிப்பை எப்போது வெளிப்படையாக அறிவிக்கிறாரோ, அப்போது தான் அவருடைய முதல் அடியை அரசியலில் எடுத்து வைக்கிறார் என்பதாகும்.

அந்த வகையில் விஜய்யின் இன்றைய அரசியல் நகர்வுகள் என்பது, ஒரு ஆறு மாத குழந்தை என்றே சொல்லலாம் என தெரிவிக்கும் அரசியல் பார்வையாளர்கள், இனி அந்த குழந்தை ஊர்ந்து, தவழ்ந்து, எழுந்து அரசியலில் களத்தில் ஓடுவதற்கு சுமார் பத்து வருடங்கள் ஆகும், இந்நிலையில் விஜய் தேர்தல் களத்தை எதிர்கொள்ள சுமார் பத்து வருடங்கள் ஆகும், அப்படி 10 வருடங்கள் தன்னை தயார் படுத்திகொண்டு விஜய் அரசியலில் போட்டியிட்டாலும், எம்ஜிஆர் போன்ற முழுமையான வெற்றியை பெற முடியாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.