அரசியலுக்கு வருவது உறுதி … முக்கிய ஃபார்முலாவை கையில் எடுத்து களத்தில் இறங்கும் விஜய்..!

0
Follow on Google News

நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் நகர்வுகளை தற்பொழுது விறுவிறுப்பாக எடுத்து வைத்துக் கொண்டிருப்பது தமிழக அரசியலில் விஜய்யின் எதிர்பார்ப்பு அதிகரித்ததுள்ளது. நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்த பின்பு, அவருக்கென பெரும் ரசிகர் வட்டம் உருவாக்கியது. ஒரு கட்டத்துக்கு மேல் அவருக்கான அரசியல் ஆசையை நோக்கி விஜய் நடவடிக்கைகைகள் இருந்து வந்தது.

1996 சட்டமன்றத் தேர்தலில் போது நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வராகும் வாய்ப்பு இருந்தும் அதை சரியாக பயன்படுத்த தவறிவிட்டார். இருந்தாலும் அடுத்த தேர்தலில் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவார் என் ரஜினிக்கான செல்வாக்கு மக்கள் மத்தியில் குறையாத வண்ணம் தொடர்ந்த அதிகரித்து வந்த நிலையில், ரஜினிகாந்த அரசியலுக்கு இதோ வருவார், அதோ வருவார் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, கடைசி வரை அரசியலுக்கு வராமல் ஏமாற்றி விட்டார் ரஜினி.

இதற்கு காரணம் ரஜினிக்கான அரசியல் வாய்ப்பு இருந்த போது, அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது தான். மேலும் அவர் அரசியலுக்கு வர விருப்பிய காலத்தில் அரசியல் சூழல் அவருக்கு சாதகமாக இல்லை என்பதுதான் அரசியலின் எதார்த்தம். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் போன்று தான் ஏமாந்து விடக் கூடாது என்பதற்காகவும், மேலும் ரஜினிகாந்த் ஃபார்முலாவை பின்பற்றி தன்னுடைய அரசியல் நகர்வுகளை நகர்த்திக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்.

இதற்கு முன்பும் நடிகர் விஜய் மெல்ல ரஜினிகாந்த் போன்று அவ்வப்போது தன்னது அரசியல் நகர்வுகளை நகரத்தினாலும் கூட, தொடர்ந்து பல்வேறு சிக்கலில் சிக்கி அதிலிருந்து மீள முடியாமல் தவித்தார்.ஜெயலலலிதா முதல்வராக இருந்த போது தலைவா படத்தில் மூலம் அரசியல் நகர்வுகளை செய்து, பின்பு ஜெயலலிதாவை எதிர்கொள்ள முடியாமல் சரண்டர் ஆனார்.

அதற்கு முன்பு திமுக ஆட்சி காலத்தில் இதுபோன்ற சிக்கலை சந்தித்தார் விஜய். அதனாலேயே அவர் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்துச் செல்லும்போது இது போன்ற சிக்கல்கள் வந்தபோதெல்லாம் தற்காலிகமாக தன்னுடைய அரசியல் நகர்வுகளை நிறுத்திவிட்டு பின் வாங்கினார் விஜய். ஆனால் தற்பொழுது நடிகர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலினுக்கும்மான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்து உள்ளது.

சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களை அழைத்து வீட்டில் பிரியாணி விருந்து கொடுத்த நடிகர் விஜய் ரசிகர்களிடம் அடுத்த தன்னுடைய அரசியல் நகர்வுகள் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் பெரும்பாலான படங்கள் ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் அவர் வழிபட்டு அவர் வசனம் பேசிய பின்பே அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.

இந்நிலையில் விஜய் நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் வாரிசு படம் முடிந்து, அடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் இருக்கும் விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு ஒரு பன்ச் டயலாக் பேசி தன்னுடைய படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார் விஜய், மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தை முடித்துவிட்டு அடுத்து விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படம் முழுக்க முழுக்க ஒரு அரசியல் சார்ந்த ஒரு படமாக இருக்கும் என்றும் அது வருகின்ற 2026 தேர்தல் தேர்தலை மையப்படுத்தி தன்னுடைய அரசியலுக்கு ஆரம்பமாக அந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது