விஜய் கையை தட்டிவிட்ட மாணவி.. மேடையில் விஜய்க்கு ஏற்பட்ட உச்சகட்ட அவமானம்… நடந்த உண்மை என்ன.?

0
Follow on Google News

தமிழக வெற்றிக்கழகம் சார்பில், இரண்டாவது ஆண்டாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில், முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஒரு மாணவிக்கு சால்வை அணிவித்து, நடிகர் விஜய், அவரின் தோள் மீது கை போட்டு புகைப்படம் எடுக்கும் போது, உடனே அந்த மாணவி விஜய்யிடம், தனது தோளிலிருந்து கையை எடுக்கச் சொன்னது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பொதுவாக நடிகர்கள் என்றாலே அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களும் பேசுபொருளாகவும், சர்ச்சையாகவும் வெடிக்கும். அதில் விஜய் என்றால் சொல்லவே வேண்டியதில்லை, அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் எண்ணில் அடங்காமல் இருப்பதைப் போல, ஹேட்டர்ஸ்களும் அதிக அளவில் இருக்கிறார்கள். அவர்கள் விஜய்க்கு எதிராக ஒரு சிறிய விஷயம் கிடைத்தாலும் அதனை ஊதி பெரிதாக்கி விடுவார்கள்.

அதிலும் தற்போது நடிகர் விஜய் அரசியலில் வேறு என்ட்ரி கொடுத்ததால், நிறைய புது எதிரிகளும் உருவாகி இருக்கிறார்கள். அப்படிதான் கடந்த வாரம் முழுவதுமே, த்ரிஷா, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதிலிருந்து, விஜய்யும் திரிஷாவும் காதலிக்கிறார்கள், திரிஷா செல்லும் அனைத்து இடங்களிலும் விஜய் இருக்கிறார், மேலும் விஜய் அணிந்திருக்கும் அதே ஷூ, த்ரிஷாவின் புகைப்படத்திலும் இருக்கிறது என, பல தகவல்களை திரட்டி சோசியல் மீடியா முழுவதும் அந்த செய்திகளை தான் பரப்பிக் கொண்டிருந்தனர்.

தற்போது இந்த சர்ச்சையிலிருந்து படிப்படியாக வெளியே வந்த விஜய் மீண்டும் புது சர்ச்சையில் சிக்கியுள்ளார். கல்வி விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில், நடிகர் விஜய் அங்கு வந்திருந்த அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் தானே, தன் கையாலயே பாராட்டு சான்றிதழ் வழங்கி, அந்த மாணவர்களை கௌரவிக்கும் விதமாக சால்வையும் அணிவித்து வாழ்த்தினார். அதோடு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அப்படி புகைப்படம் எடுக்கும் போது தான் நடிகர் விஜய் ஒரு மாணவியின் தோள் மீது வரம்பு மீறி, அவரது அனுமதி இல்லாமலேயே கை போட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார். அப்போது உடனே அந்த மாணவி விஜய்யிடம் தோலில் இருந்து கை எடுக்குமாறு மேடையில் வைத்தே கூறியுள்ளார். இந்த காணொளி தான் நேற்று சமூக வலைதளங்களில் விஜய்க்கு எதிராக பரவிவந்தது.

அதில் பலர், அந்த மாணவியிடம் இருந்து இப்போதாவது பாடம் கற்றுக்கொள்ளுங்கள், அவர்கள் தோல் மீது கை போட உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது, பெண் குழந்தைகள் மேல் கைப்போட அவர்களின் தந்தைகளே தயங்குவார்கள், விளம்பர மோகத்திற்காக, போட்டோ எடுக்க வேண்டும் என்பதற்காக, ஒரு பெண்ணின் மீது கை போடுவதா என கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இது ஒரு புறம் இருக்க, இந்த வீடியோவில் நடந்ததை முழுமையாக பாருங்கள், பாதி வீடியோவை விஜய்க்கு எதிராக பரப்ப கூடாது என அதன் முழு காணொளியை விஜயின் ஆதரவாளர்கள் வெளியிட்டு, அந்த மாணவி தோலில் இருந்து விஜயின் கையை எடுக்கச் சொல்லி, பிறகு அவரே விஜயின் கையை தன் கைக்குள் போட்டு புகைப்படம் எடுத்துள்ளார், அந்த மாணவி விஜயை தோளிலிருந்து கையை எடுக்கச் சொல்லி, தானே விஜயின் கையைப் பிடித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது தான் உண்மை, பலரும் முதல் பாதி வீடியோவை மட்டும் பரப்பி விஜய்க்கு எதிராக வேலை செய்கின்றனர் என, விஜய் ரசிகர்கள் உண்மை வீடியோவை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளனர்.