நடிகர் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், The GOAT என்ற படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அதிரடியாக, அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை எடுத்தது போல், விஜயை வைத்து வெங்கட் பிரபு Goat என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் வித்தியாசமான கதை, வித்தியாசமான கெட்டப் என ரசிகர்களை ஹைப் ஏற்றி விட்ட வெங்கட் பிரபு, இதுவரை ஒரு உருப்படியான அப்டேட்டையும் வெளியிடவில்லை.
மேலும் யுவன் சங்கர் ராஜாவும் அனைத்து பாடலையும் சொதப்பி விட்டார் என விஜய் படத்திற்கு, விஜய் ரசிகர்களே முட்டு கொடுக்க முடியாமல் கதறுகின்றனர். அந்த அளவிற்கு அண்ணன் வெங்கட்பிரபு விஜய்யின் லுக்கையும், தம்பி யுவன் சங்கர் ராஜா பாடலையும் நாஸ்தி செய்து வைத்திருக்கின்றனர். ஏற்கனவே ஃபர்ஸ்ட் சிங்கிள் என, விஜய் பாடிய விசில் போடு என்ற பாடல் வெளியானது. அப்போதே பலரும் விசில் போடு பாடல் வைபாகவே இல்லை என கூறி வந்தனர்.
அதனைத் தொடர்ந்து சின்ன சின்ன கண்கள் என்ற இரண்டாவது சிங்கிள் வெளியானது, அந்த பாடலை ஓரளவு ஏற்றுக்கொண்டு மனதை தேற்றி வைத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு, மூன்றாவது சிங்கள் என ஸ்பார்க் என்ற ஒரு பாடலை வெளியிட்டனர். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் யுவன் சங்கர் ராஜாவை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். அதோடு யுவன் சங்கர் ராஜா தான் விஜய்க்கு எதிரி, இந்த படத்தை பிளாப் செய்து விட்டார் என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும் வெங்கட் பிரபுவை நம்பி விஜய் இந்த படத்தை கொடுத்திருக்கக் கூடாது என்றும் வெங்கட் பிரபு டைட்டிலை மட்டும் தாறுமாறாக ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என வைத்து விட்டு, வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டிலும், இப்படி கோட்டை விட்டு வருகிறாரே என விஜய் ரசிகர்களே குமுறி வருகின்றனர். மேலும் பாடலை ரசிக்க முடியாமல் போக மிக முக்கியமான காரணமே, விஜய்யின் டீ ஏஜிங் லுக் தான் என்றும் சொல்லப்படுகிறது.
ரொம்பவே செயற்கைத்தனமாக கார்ட்டூன் பொம்மை போலவே உள்ளதாகவும், வெங்கட் பிரபு கதையில் விஜய்யை ரோபோவாக காட்டினால் மட்டுமே ரசிகர்கள் இந்த லுக்குடன் ஒன்றிணைவார்கள் என்றும், மகன் விஜய்யாக காட்டினால் கதை கந்தலாகி விடும் என்றும் கூறுகின்றனர். அதோடு விஜய் வெறியர்களான எங்களுக்கே இந்த பாடல் பிடிக்கவில்லை என்றும், சொம்பெல்லாம் அடிக்க முடியாது என்றும், விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா காம்போ செட்டாகவில்லை, அதுதான் உண்மை விஜய் ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.
அதோடு விஜய் ரசிகர்கள் 3 பாடலை வெளியிட்டதே போதும், இதற்கு மேல், Young விஜய் லுக்கை எதிலும் காட்டாதீங்க, நேரடியாக நாங்க படத்துலயே பார்த்துக் கொள்கிறோம். ஆடியோ லாஞ்ச், டீசர், டிரெய்லர் என கோட் படத்தின் காட்சிகளை காட்டி மேலும், மனசை நோகடிக்க வேண்டாம் என்றும், விஜய்யின் கடைசி படமாக கோட் மாறி விடக்கூடாது என்றும் குமுறி வருகின்றனர்.
இந்நிலையில்தான் யுவன் சங்கர் ராஜாவிடம், கோட் படத்தின் பாடல்கள் பற்றி பல விமர்சனங்கள் எழுகிறது என்று கேட்டபோது, விமர்சனங்களை விமர்சனங்களாகத்தான் பார்க்கிறேன், நான் எழுதும் சில பாடல்கள் ஹிட் ஆகலாம், சில பாடல்கள் ப்ளாப் ஆகலாம். அதற்கு என்ன செய்வது, வரும் விமர்சனங்களை நான் ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்றார் போல் திருத்திக் கொள்வேன் என்றும் பதிலளித்திருந்தார்.
இதனை பார்த்த விஜய் ரசிகர்கள், படத்தில் ஏதாவது ஒரு பாடல் பிளாப்பானால் பரவாயில்லை. ஆனால் படத்தில் உள்ள எல்லா பாடலும் பிளாப் ஆனால் என்ன செய்வது என்றும் யுவன் சங்கர் ராஜாவை பார்த்து மறு கேள்வி எழுப்பி வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.