விஜய் என்ன அவ்வளவு பெரிய ஆளா.? தூக்கி எறிந்த நடிகர் விக்ரம்.. எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியாகி தமிழ் சினிமாவில் அதிக வசூலை வாரி குவித்து ப்ளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது விக்ரம், கடந்த சில காலமாகவே தமிழ் சினிமாக்கள் தொடர் தோல்வியை சந்தித்து, பிறமொழி படங்கள் மெகா ஹிட் அடித்து வந்த நிலையில், தமிழ் சினிமாவுக்கு புத்துணர்ச்சியை கொடுத்த படம் விக்ரம்.

இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒரு சில காட்சிகளிலே மட்டும் நடித்திருந்தாலும், அவர் ஏற்றிருந்த அந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விக்ரமை தான் அணுகி கேட்டுள்ளார். ஆனால் நடிகர் விக்ரம் இந்த கதாபாத்திரம் மிக சிறியதாக இருக்கின்றது என வேண்டாம் என்று தவிர்த்து விட்டார்.

ஆனால் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. இந்த நிலையில் விக்ரம் வேண்டாம் என புறக்கணித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவை நடிக்க வைத்தார் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படம் வெளியான பின்பு ரோலக்ஸ் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதால், விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

அந்த பாகத்தில மெயின் ஹீரோவாக சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விக்ரம் சிறிய கதாபாத்திரம் என ரோலக்ஸ் கதாபாத்திரத்தை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் இன்று விக்ரம் இரண்டாம் பாகத்தில் நடிகர் விக்ரம் மெயின் ஹீரோவாக நடித்திருப்பார். இந்த நிலையில் நடிகர் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என ஆசையுடன் இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

தற்பொழுது அவர் இயக்கும் நடிகர் விஜய் நடிக்கும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சுமார் ஏழு வில்லன் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு வில்லனாக நடிகர் அர்ஜுன் நடிக்கிறார். அர்ஜுன் நடிப்பதற்கு முன்பு இதில் நடிகர் விஷாலை நடிக்க வைப்பதற்கு லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் விஷால் இதில் நடிப்பதற்கு மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் விஷாலுக்கு முன்பு இந்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க வைப்பதற்கு நடிகர் விக்ரமை அணுகியுள்ளார் லோகேஷ் கனகராஜ் என்கின்ற ஒரு தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இது குறித்து லோகேஷ் நேரில் சந்தித்து விக்ரமிடம் பேசியபோது, அந்த படத்தில் விஜய்க்கும் தனக்கும் சமமான கதை இருந்தால் நடிக்கிறேன், மற்றபடி ஏழு வில்லன்களில் ஒருவராக நான் நடிக்க, விஜய் என்ன அவ்வளவு பெரிய ஆளா, என்று நடிகர் விக்ரம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.